Ad Space Available here

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடி வதைக்கு எதிரான குழுவுக்கும் , ஆதரவான குழுவிற்குமிடையே மோதல்.



- ஜே.எம்.ஹபீஸ்-

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (15.1.2017)

இது தொடாபாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின் படி

பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பகிடி வதைக்கு எதிரான குழுவுக்கும், முகாமைத்துவப் பீடத்தைச் சேர்ந்த பகிடி வதைக்கு ஆதரவான குழுவிற்குமிடையே இம் மோதல் ஏற்பட்டுள்ளது.


சம்பவத்தில் காயமடைந்துள்ளவர்கள் விஞ்ஞான பீடத்தைச சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் இருவராகும்.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள றகர் மைதானத்திற்கு அருகில்  இத்தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள தாகவும் உபவேந்தர் பேராசிரியர் உபுவ் திசாநாயக்கா தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடி வதைக்கு எதிரான குழுவுக்கும் , ஆதரவான குழுவிற்குமிடையே மோதல். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடி வதைக்கு எதிரான குழுவுக்கும் , ஆதரவான குழுவிற்குமிடையே மோதல். Reviewed by Madawala News on 1/15/2018 04:35:00 PM Rating: 5