Yahya

மடவளை " மர்கஸ் அல் இஸ்லாஹ் அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான நிலையம்" ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழா.



🎓ஒழுக்க விழுமியங்களுக்குடனான  ஆன்மீக நெறி பிறழாத நல்லதோர் ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் ஆவலுடன் மடவளையில் மர்கஸ் அல் இஸ்லாஹ் தம்மாலான பல சேவைகளை செய்து வருகின்றமை மக்களால் அறியப் பட்ட விடயமாகும்.

🏠அதன் தொடரில் பாடசாலை  விடுமுறை காலத்தில் மாணவ சமூகத்தை  நன்நெறிப் படுத்துவதற்காக காலத்திற்குத் தேவையான பல தலைப்புகளில் ஒருவார பயிற்சி நெறியைத் தொடர்ந்து பரீட்சையையும் நடாத்தியது.

🎓ஆறு உலமாக்களைக் கொண்டு நடாத்தப் பட்ட இப்பயிற்சி நெறியின் பரிசளிப்பு விழா நேற்றைய தினம் இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

🎙அஷ்ஷேய்க் ரிஸ்வான் ஜுனைத் மதனி (MA) அவர்களது தலைமை உரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அஷ்ஷேய்க் ரமீஸ் ரியாதி (BA), கலாநிதி அஷ்ஷேய்க் அம்ஜத் றாசிக் மதனி (Phd) ஆகியவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

👨‍👨‍👦‍👦ஆண்கள் பெண்களுக்காக தனித்தனி ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் இருநூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.

👤மாணவன் உமர் பின் சமீட் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாவது பரிசை பெற்றுக் கொண்டார்.

📚அத்துடன் சிறந்த ஆய்வாளரும் நாடறிந்த எழுத்தாளருமான அஷ்ஷேய்க் ரிஸ்வான் மதனி சமூகத்துக்கு வழங்கிய எழுத்துப் பொக்கிஷங்களில் பிரதான இடத்தை வகிக்கும் "அல்லாஹ்வின் ஸிபத்துகள்" எனும் நூலை ரேந்தபொல மஸ்ஜிதின் கதீப் மவ்லவி இப்திகார் அவர்களுக்கு தன் கரத்தாலேயே
வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

⏳மஸ்ஜிதுல் இஸ்லாஹ் வின் கதீபும் முஅல்லிமுமான அஷ்ஷேய்க் அல் ஹாபிழ் அர்ஷாட் (மீஸானி), அஷ்ஷேய்க் அம்ஜத் றாசிக் மதனி (PhD), அஷ்ஷேய்க் ரிஸ்வான் மதனி (MA), அஷ்ஷேய்க் ரமீஸ் ரியாதி (BA), சகோதரர் அக்பர் அலி (Hira farm Pvt Ltd) உட்பட பலரும் மாணவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், சிறப்பு விருதுகள் வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்கள்.

⏰காலை 9:30 மணியளவில் ஆரம்பமான இச்சிறப்பு நிகழ்ச்சி பகல் 1:00 மணிக்கு இறையுதவியுடன் துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது.


இப்படிக்கு
மீடியாப் பிரிவு
மர்கஸ் அல் இஸ்லாஹ்.
மடவளை பஸார்
மடவளை " மர்கஸ் அல் இஸ்லாஹ் அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான நிலையம்" ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழா. மடவளை " மர்கஸ் அல் இஸ்லாஹ் அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான நிலையம்" ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழா. Reviewed by Madawala News on 1/02/2018 10:26:00 AM Rating: 5