Yahya

பள்ளிவாயலை நாசப்படுத்தி போலீசில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்ட நபரை, 1,700 அமெரிக்க டொலர்களை செலுத்தி விடுவித்த அப்பள்ளி இமாம் நஸ்ரி.


அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நிறச்சாயத்தால் மத வெறுப்பு வாசகங்களை எழுதிய குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட நபரை, அப்பள்ளிவாசலின் இமாம் மன்னித்து அவருக்கான அபராதத் தொகையையும் செலுத்தி, விடுவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அர்கான்ஸாஸ் மாநிலத்தில் போர்ட் ஸ்மித் எனும் சிறிய நகரொன்றில் அமைந்துள்ள மஸ்ஜித் அல்லலாம் பள்ளிவாசல் சுவரில் ஆப்ரஹாம் டேவிஸ் எனும் நபர் நிறச்சாயங்களை பயன்படுத்தி கவாஸ்திகா குறியீடுகள் மற்றும் இங்கிருந்து வெளியேறு' எனும் வாசகங்களை வரைந்து சேதப்பட டுத்தியுள்ளார்.


பள்ளிவாசலில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளின் உதவி யுடன் இவர் மத வெறுப்பு நடவடிக்கை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவரது குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய நீதிமன்றம் 1,700 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்து தீர்ப்பளித்தது.


எனினும், ஆப்ரஹாம் டேவிஸினால் அத்தொகையை செலுத்த முடியாமற்போகவே சேதத்திற்கு உள்ளான பள்ளி வாசலின் இமாமான நஸ்ரி தலையிட்டு குறித்த நபர் மீது விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்தி அவரை மன்னித்து விடுவித்துள்ளார்.

இது குறித்து இமாம் நஸ்ரி உள்ளூர் ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,

"குறித்த நபர் செய்தது மத வெறுப்பை தூண்டும் வகையிலான தீங்கான ஒரு செயலாகும். எனினும்,

அதுதொடர்பில் பழிவாங்கும் உணர்வுகள் எம்மிடம் இல்லை. பண நெருக்கடியில் இருக்கும் அந்நபர் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாவதை நாம் விரும் பவில்லை.

எனவேதான் அவர் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நாமே செலுத்தி அவரை விடுவித்தோம். எமது பள்ளிவாசலின் புனர்நிர்மானத்துக்கென நாம் சேமித்து வைத் திருந்த நிதியைக் கொண்டே அந்நபரை விடுவித்தோம்.

முஸ்லிம்களைப் பற்றி தெளிவான புரிதல்களை அவர் முன்னமே கொண்டிருந்தால் இவ்வாறான காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார் எம் மீது அவர் முன்னர் கொண்டி ருந்த தவறான புரிதல்களை நேரடியாக எம்மிடம் தெரியப்படுத்தி இருந்தால் அது தொடர்பில் நாம் அவருக்கு தெளிவை வழங்கியிருப்போம். எமக்கிடையான வேற்றுமைகளைக் களைவதே முக்கியம்" என தெரிவித்தார்.

ஹசன் இக்பால் | விடிவெள்ளி   

பள்ளிவாயலை நாசப்படுத்தி போலீசில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்ட நபரை, 1,700 அமெரிக்க டொலர்களை செலுத்தி விடுவித்த அப்பள்ளி இமாம் நஸ்ரி. பள்ளிவாயலை நாசப்படுத்தி போலீசில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்ட  நபரை, 1,700 அமெரிக்க டொலர்களை செலுத்தி விடுவித்த அப்பள்ளி இமாம் நஸ்ரி. Reviewed by Madawala News on 1/05/2018 11:01:00 AM Rating: 5