Yahya

தேர்தலில் வெற்றி பெற்றால், எனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பள்ளிவாயல்களின் வளர்ச்சிக்காக வழங்குவேன்.


(எஸ்.அஷ்ரப்கான்)

நான் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால்  எனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிவாயல்களின் வளர்ச்சிக்காக வழங்குவேன் என சாய்ந்தமருது 19 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரும் அதீப் பௌண்டேசன் தலைவருமான முஹர்ரம் பஸ்மீர் தெரிவித்தார்.

தனது இல்லத்தில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தனதுரையில் குறிப்பிடும்போது,

ஏழைகளின் படுகின்ற கஸ்டத்தை உணர்வுபூர்வமாக அனுபவித்தவன் என்ற ரீதியிலும் சிறந்த கல்வியினுடாகவே பிராந்தியத்தின் கல்வியை மேம்படுத்தமுடியும் என்ற அடிப்படையிலும் நான் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான கல்வி நடவடிக்கைகளுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளேன். அந்த அடிப்படையில் சாய்ந்தமருது 19 ஆம் வட்டார மக்களின் தேiவையறிந்து சேவையாற்ற நான் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை.

சுhய்ந்தமருது மக்களின் நீண்டகால அவாவினை தோளிலே சுமந்தவண்ணம் நாம் இன்று தேர்தலில் குதித்துள்ளோம். தேர்தலில் வெற்றிபெறுவது அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதற்கப்பால் சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி கோரிக்கையை வென்றெடுப்பது என்பதே எமது பயணத்தின் பிரதான இலக்காகும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் எந்தத் தடைகள் வந்தாலும் அதனை துடைத்தெறிந்து நாம் முன்னோக்கிச் செல்வோம். எமக்கு பக்கபலமாக சாய்ந்தமருது மக்களும், முன்னுதாரணமாக திகழ்கின்ற சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரும் இருக்கும்போது எமக்கு இலக்கை எட்டுவது இலகுவாகும்.

சிலர் உரிமை அரசியலில் தொடர்ந்தும் தக்பீர் கோசத்துடன் மக்களை மடையர்களாக்கலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். இந்த தேர்தலுடன் அவர்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாம் யாரையும் தூற்றுவது எமது நோக்கமல்ல. அதிகாரத்தில் இருந்தபோது வாக்களித்த மக்களின் குறைகளை இனம்கண்டு அப்போது தீர்த்து வைத்திருந்தால் நாம்; அகிம்சை வழிப்போராட்டத்திற்கு சென்றிருக்க மாட்டோம். மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற அரசியல் நாடகத்தை அரசியல்வாதிகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

சாய்ந்தமருது மக்கள் இன்று எடுத்திருக்கின்ற விஸ்வரூபம் ஆட்சியாளர்களுக்கு பெரும் படிப்பினையை கொடுக்க வேண்டும். அதுபோல் தேசியத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களும் தங்களின் உரிமைகளுக்காக எதிர்காலத்தில் ஒற்றுமைப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் எங்களுக்காக அல்ல, மக்களுக்காகத்தான் நாம் என்கின்ற ஜனநாயக பண்பு அரசியல்வாதிகளிடத்தில் கோலூன்றும்.

எனவேதான் கட்சி அரசியல் என்று கிளம்பியிருக்கின்ற அரசியல்வாதிகள் இம்முறை உள்ளுராட்சி தேர்தலிலிருந்து கடுமையான பாடத்தை கற்றுக் கொள்வார்கள். அதற்கான மக்கள் எழுச்சி இன்று சாய்ந்தமருதில் ஆரம்பித்திருக்கின்றது. எனவே அடிமட்ட அப்பாவி மக்களின் குரலாக ஒழிக்க இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எனது வட்டார மக்கள் என்மீது கொண்டுள்ள அன்பையும் ஆதரவையும் வைத்து எதிர்காலத்தில் அவர்களுக்காக எனது வாழ்நாளை அர்ப்பணித்து சேவையாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றால், எனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பள்ளிவாயல்களின் வளர்ச்சிக்காக வழங்குவேன். தேர்தலில் வெற்றி பெற்றால், எனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பள்ளிவாயல்களின் வளர்ச்சிக்காக வழங்குவேன். Reviewed by Madawala News on 1/04/2018 11:26:00 PM Rating: 5