Yahya

சுப்பர் மார்கெட்டில் நிகாப் அணிந்த முஸ்லிம் யுவதி மீது பொய்க் குற்றச்சாட்டு. முகத்திரையை பலவந்தமாக நீக்கி சோதனை. #இலங்கை.


பேருவளை நகரில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மார்க்கட் கிளையொன்றில் முஸ்லிம் யுவதியொருவர் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பலாத்காரமாக சோதனையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

நேற்று முன்தினம் மாலை பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான முஸ்லிம் யுவதியும் அவரது சகோதரனும் பொருட்களை வாங்குவதற்காக குறித்த சுப்பர் மார்க்கட்டுக்குச் சென் றுள்ளனர்.

 தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் அதற்கான பணமும் செலுத்தப் பட்டுள்ளது.

 அதன் பின்னர் அவர்கள் வெளியேற முற்பட்டவேளையில் "உங்களைச் சோதனை செய்ய வேண் டியுள்ளது. நீங்கள் பொருட்களை திருடியுள்ளதாக வாடிக்கையாளரொருவர் எங்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்" எனக் கூறிய காவலாளியொருவர் அந்தச் சகோதரியை மீண்டும் உள்ளே அழைத்துள்ளார்.

"நாங்கள் திருடவில்லை" என இருவரும் கூறிய போதும் அவர்கள் பலாத் காரமாக அச்சகோதரியை உள்ளே அழைத்துச்சென்று பெண் காவலாளி ஒருவர் சோதனையிட்டுள்ளார்.

 அச்சகோதரியின் நிகாப் (முகத்திரை) மற்றும் ஹபாயாவை கழற்றியே அப்பெண் காவலாளி சோதனையிட்டுள்ளார்.

சோதனை நடவடிக்கைகளின் பின்னர் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை எனக் கூறி காவலாளி, அவர்களை வெளியில் செல்ல அனுமதித்துள்ளார் இச் சம்பவத்தையடுத்து அதே சுப்பர் மார்க்கட்டில் இருந்த ஏனைய முஸ்லிம் வாடிக்கையாளர்களும் இதற்கெதிராக நிர்வாகத்திடம் தமது கண்டனத்தைத் தெரி வித்துள்ளனர்.

இதன்போது ஸ்தலத்திற்கு பேருவளை பொலிஸாரும் வரவழைக்கப் பட்டனர். இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கிளை முகாமையாளர் குறித்த யுவதியின் தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

- vidivelli-
சுப்பர் மார்கெட்டில் நிகாப் அணிந்த முஸ்லிம் யுவதி மீது பொய்க் குற்றச்சாட்டு. முகத்திரையை பலவந்தமாக நீக்கி சோதனை. #இலங்கை. சுப்பர் மார்கெட்டில் நிகாப் அணிந்த முஸ்லிம் யுவதி மீது பொய்க் குற்றச்சாட்டு. முகத்திரையை பலவந்தமாக நீக்கி சோதனை. #இலங்கை. Reviewed by Madawala News on 1/03/2018 01:55:00 PM Rating: 5