Yahya

மிளகாய்த்தூள் அடித்து ஒன்றரை கோடி கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் அப்டேட்ஸ்..


(எம்.எப்.எம்.பஸிர்)
நுவரெலியா, பிளக்பூல்  பகுதியில் அமைந்துள்ள சிகரட் முகவர் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணமும், 37 இலட்சம் ரூபா பெறுமதியிலான காசோலை ஒன்றும்,  மிளகாய்த்தூள் தூவி கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.


அதன்படி குறித்த பணத்தை வைப்பிலிட எடுத்துச் சென்ற மிளகாய் தூள் தாக்குதலுக்கு இலக்கான சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் பொலிஸார் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.


இதனிடையே கொள்ளையர்கள்  கொள்ளையடிக்க வந்த முச்சக்கர வண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நுவரெலியா சாந்திபுரம் கலாபுரவுக்கு செல்லும் வீதியில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் கைவி டப்பட்டிருந்த நிலையில் இந்த முச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியானது, கடந்த டிசம்பர் 8 ஆம் திகதியன்று அம்பேவல பொரகஸ் வீதியில் வைத்து கொள்ளையடிக்கப்பட்ட முச்சக்கர வண்டி எனவும் அது அம்பேவலையைச் சேர்ந்த வெல்லசாமி சிவநாதன் என்பவருக்கு சொந்தமானது எனவும் முச்சக்கர வண்டி தொடர்பில் முன்னெடுக்கப் பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நுவரெலியா, அம்பேவலை பிரதான வீதி யில் பிளக்புள் பகுதியில் இருந்து நுவரெ லியா தனியார் வங்கியில் வைப்பிலிடுவ தற்காக சிகரட் நிறுவனம் ஒன்றின் முகவர்களாக செயற்படுகின்ற இரண்டு ஊழியர்க ளால் இந்த பணம் சிறிய ரக லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்டுள்ளது.


இவர்கள் நுவரெலியா நகரின் விக்டோரியா பூங்கா வழியாக தனியார் வங்கிநோக்கி சென்றபோது இந்த பணம் கொள்ளையிடப் பட்டிருந்தது.

மிளகாய்த்தூள் அடித்து ஒன்றரை கோடி கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் அப்டேட்ஸ்.. மிளகாய்த்தூள் அடித்து ஒன்றரை கோடி கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் அப்டேட்ஸ்.. Reviewed by Madawala News on 1/05/2018 09:35:00 AM Rating: 5