Yahya

பொது­ஜன பெர­மு­ன உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பண நிகழ்வும் மகிந்த ராஜபக்சவின் முழு உரையும்.


ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன இணைந்து அமைத்­துள்ள நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டை சீர­ழி­வின்பால் இட்டுச் செல்­கி­றது. அதி­லி­ருந்து நாட்­டைப்­பா­து­காப்­ப­தற்கே பொது­ஜன பெர­முன தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எனது புகைப்­ப­டத்தைக் காண்­பித்து அர­சியல் நடத்­து­வ­தற்கு பொது­ஜன பெர­மு­ன­விற்கு மாத்­திரம் உரித்­துள்­ளது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பணம் செய்யும் நிகழ்வு நேற்று கொழும்­பு சுக­த­தாஸ உள்­ளக அரங்கில் நடை­பெற்­றது. அந்நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் எப்­போ­து­மில்­லா­த­வாறு தற்­போது ஊழல் மோச­டிகள் அதி­க­ரித்­துள்­ளன. ஆனால் எமது ஆட்சி காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எந்­த­வொரு அபி­வி­ருத்­தி­யையும் நல்­லாட்­சியில் காண­மு­டி­யா­துள்­ளது. அனைத்து அபி­வி­ருத்­திப்­ப­ணி­க­ளையும் அர­சாங்கம் நிறுத்­தி­யுள்­ளது. எனினும் தாரா­ள­மாக அர­சியல் பழி­வாங்கல் இட­ம­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­கொள்­கிறோம். எனினும் வழ­மை­போன்று இம்­முறை தேர்­தலை எதிர்­கொள்­ள­வில்லை. தேர்­த­லுக்­காக நீண்ட போரட்டம் நடத்­தப்­பட்­டது. கூட்டு எதிர்க்­கட்சி அதில் மிகுந்த சிரத்­தையை எடுத்­துக்­கொண்­டது.ஆக­வேதான் இரண்­டரை வருடப் போராட்­டத்தின் பின்னர் தேர்­தலை எதிர்­கொள்ள முடிந்­துள்­ளது.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்டாம் திக­தியை எம்மால் மறக்க முடி­யாது. ஏனெனில் அன்­றுதான் நாம் தோல்­வியைச் சந்­தித்த தின­மாகும். மேலும் அத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னரே தோல்­வியைச் சந்­தித்தார் என்ற பாடத்­தையும் மறந்­து­விட முடி­யாது.

ஆயினும் அத்­தோல்வி ஏற்­பட்டு64 நாட்­களின் பின்னர் மீண்டும் நாம் எமது பலத்தை நிரூ­பிக்கத் தொடங்­கினோம். மேலும் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­காது எதிர்­கட்­சி­யாகப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வேண்டும் என நாம் கேட்­டுக்­கொண்டோம்.

எனினும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பு அதற்கு உடன்­ப­டாது ஐக்­கிய தேசிக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராகி ஐக்­கிய தேசியக் கட்சிக் கொள்­கைக்குள் சங்­க­ம­மா­னது. அதன் விளை­வாக தேசிய சொத்­துகள் வகை­தொ­கை­யின்றி விற்­கப்­ப­டு­கின்­றன.மேலும் பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு, வரி அதி­க­ரிப்பு உட்­பட இன்­னோ­ரன்ன நெருக்­க­டி­களைச் சந்­திக்க நேர்ந்­துள்­ளது.

மேலும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் ஐம்­ப­துக்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­களைக் கொண்ட கூட்டு எதிர்க்­கட்­சிக்கு எதிர்க்­கட்சித் தலைமை வழங்­கப்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யாகச் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கே எதிர்க்­கட்சித் தலைமை வழங்­கப்­பட்­டது. உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் கால­தா­மத்­திற்கு அர­சாங்கம் மட்­டு­மல்­லாது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளன.

அத்­துடன் எமது ஆட்சி காலத்தில் நாம் எதற்கும் அஞ்­ச­வில்லை. யுத்­தத்தை முடித்துக் காட்­டுவோம் என்றோம். அவ்­வாறு 30 வருட கால யுத்­தத்தை நிறை­வு­செய்து காட்­டினோம். ஜி.எஸ்.பி.வரிச் சலுகை நீக்­கப்­பட்ட போதிலும் அதனை பொருட்­டாகக் கரு­தாது நாட்டில் அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­துடன் தன்­னி­றைவுப் பொரு­ளா­தா­ரத்தின் பால் நாட்டை கொண்­டு­சென்றோம்.அப்­போது ஒவ்­வொரு குடும்­பத்­தி­னரும் வாகனம் ஒன்றைக் கொள்­வ­னவு செய்யும் வகையில் பொரு­ளா­தாரம் காணப்­பட்­டது.

மேலும் நல்­லாட்சி அர­சாங்கம் வடக்கில் ஒன்­றையும் தெற்கில் மற்­றொன்­றையும் குறிப்­பிட்டு வரு­கி­றது. நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என தெற்கில் குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் சில அர­சியல் வாதிகள் சமஷ்­டி­யையும் விட அதி­க­ள­வா­ன­னதை பெற்றுத் தரு­வ­தாக வடக்கில் குறிப்­பி­டு­கின்­றனர்.

மத்­த­ளயில் விமான நிலையம் அமைத்தோம். அப்­போது எதிர்­கட்­சி­யாக இருந்த ஐக்­கிய தேசியக் கட்சி அவ்­வி­மான நிலை­யத்தை பெறு­ம­தி­யற்ற விமான நிலையம் எனக் கரு­தி­யது. எனினும் தற்­போது அப்­பெ­று­ம­தி­யற்ற விமான நிலை­யத்தை கோடிக்­க­ணக்­கான ரூபா­விற்கு விற்­பனை செய்­துள்­ளனர்.எமது அபி­வி­ருத்­தியில் மத்­தள விமான நிலை­யத்­துடன் மாத்­திரம் நிறுத்திக் கொள்­வது இலக்­கல்ல. அதற்­க­டுத்த படி­யாக இரண்­டா­வது விமான நிலையம் அமைப்­பதும் இலக்­காக இருந்­தது.

ஆகவே முழு­அ­ளவில் நோக்கும் போது நாடு தற்­போது அரா­ஜக ஆட்சி நோக்கிப் பய­ணத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. அதி­லி­ருந்து நாட்டைப் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு சக­ல­ருக்கும் உள்­ளது. என­வேதான் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன இணைந்து சீர­ழி­வுப்­பா­தையை நோக்கி கொண்டு போகும் பய­ணத்தைத் தடுத்து நாட்டைப் பாது­காப்­ப­தற்­கா­கவே பொது­ஜன பெர­மு­னவை அமைத்­துள்ளோம்.

 இக் கட்சி உள்­ளீ­ராட்சி மன்றத் தேர்­தலில் அதி­க­ள­வான சபை­களின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றும் என்­ப­த­னையும் மகிழ்­சி­யுடன் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

மேலும் தேசிய அர­சி­யலை எடுத்­துக்­கொண்டால் சக­லரும் எனது புகைப்­ப­டத்தை காண்­பித்தே அர­சியல் நடத்­து­கின்­றனர். அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எனது புகைப்படத்தைக் காண்பித்து அரசியல் நடத்துவதற்கு அருகதையில்லை. தாமரை மொட்டு சின்னத்தைக்கொண்ட பொதுஜன பெரமுனவிற்கே எனது புகைப்படத்தைக் காண்பித்து அரசியல் செய்வதற்கு உரித்து உள்ளது.

பொதுஜன பெரமுனவினூடாகப் போட்டியிடுவதற்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். எனினும் சுமார் எட்டாயிரம் பேரே வேட்புமனுவில் இடம்பிடித்துள்ளனர். ஆகவே தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாது நாட்டுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

பொது­ஜன பெர­மு­ன உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பண நிகழ்வும் மகிந்த ராஜபக்சவின் முழு உரையும். பொது­ஜன பெர­மு­ன உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பண நிகழ்வும் மகிந்த ராஜபக்சவின் முழு உரையும். Reviewed by Madawala News on 1/03/2018 10:25:00 AM Rating: 5