Yahya

பொது ஜன பெரமுன தாமரை மொட்டில் போட்டியிடும் கிழக்கு மாகாண வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கிய பஷில் ராஜபக்ஷ குழு.


-றிசாத் ஏ காதர் -
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொது ஜன பெரமுன கட்சியின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும்
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட தலைமை வேட்பாளர்களுக்கும் கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு  2018.01.08ஆந் திகதி திங்கட்கிழமை சிலோன் சிற்றி ஹோட்டலில் இடம்பெற்றது.


மேற்படி சந்திப்பு நிகழ்வு மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.

 இத் தேர்தலை வேட்பாhளர்கள் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான விரிவான விடயங்கள் ஆராயப்பட்டது. மேலும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இத்தேர்தலை முன்னெடுப்பதுக்கு வேட்பாளர்கள் பங்காற்ற வேண்டும் எனவும், வன்முறை அரசியலை பொது ஜன பெரமுன கட்சி ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை என்கிற விடயத்தினை வேட்பாளர்கள் புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும் எனவும் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

 
குறித்த சந்திப்பு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரவீர சிறிபால மற்றும் பொது ஜன பெரமுன கட்சியின் இளைஞர் அமைப்பாளர் ஜீவாந்த லக்மால் ஆகியோருடன் மூன்று மாவட்டங்களிலுமுள்ள் உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைமை வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது ஜன பெரமுன தாமரை மொட்டில் போட்டியிடும் கிழக்கு மாகாண வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கிய பஷில் ராஜபக்ஷ குழு. பொது ஜன பெரமுன  தாமரை மொட்டில் போட்டியிடும் கிழக்கு மாகாண வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கிய பஷில் ராஜபக்ஷ குழு. Reviewed by Madawala News on 1/09/2018 02:39:00 PM Rating: 5