Yahya

மொரகஹகந்த நீர்தேக்க ஆரம்ப வைபவம் மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்க 42 வருட நிறைவையொட்டி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உரை.


 (மொஹொமட்  ஆஸிக்)

மஹாவலி  கங்கையின் நீரை  வட மத்திய மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும்
 அதன்பின்  வட மாகாணத்திற்கும்  கொண்டு சென்று நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு 1976 ம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ம் திகதி கண்டி பொல்கொல்லையில் ஆரம்பிக்கப் பட்ட மஹாவலி திட்டத்திற்கு இன்றுடன் (நேற்று) 42 வருடங்கள் பூர்த்தியாகின்றன.


1976 ம் ஆண்டு சிரிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் பொல்கொல்லையில் அனைக் கட்டு ஒன்றைக் கட்டி  நீரை  வட கிழக்கு மற்றும் வட மாகாணங்களுக்கு கொண்டு செய்ய முயற்சித்தாலும் அதற்கு 30 ஆண்டு கால எல்லை விதிக்கப்பட்டது.

இருந்த போதும் 1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐதேக அரசு அதனை ஐந்து வருடத்தில் பூர்த்திசெய்ய திட்டமிட்டது. ஐந்து பிரதான நீர்தேக்கங்கள் வடிவமைக்கப்பட்ட போதும் மொரகஹகந்த நீர்தேக்கத்தை நிறைவுசெய்ய முடிய வில்லை. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் அயரா முயற்சியினால் இன்று 08 ம் திகதி மொரகஹகந்த நீர்தேக்கம் நிறைவு செய்யப்பட்டு  துரித மஹாவலித்  திட்டத்தின் கீழ் நிர்மானிக்க உத்தேசித்திருந்த ஐந்து  நீர்தேக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டதை  நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன  மற்றும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களது தலைமையில் பொல்கொல்லையில் நேற்று 08 ம் திகதி மாலை இடம்பெற்றது.


இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ,மொரகஹகந்த நீர்தேக்கத்திற்கு பொருத்தமான பெயர் ஒன்றை  வைப்பதற்காக பல பெயர்கள்  மும்மொழியப்பட்டுள்ள போதும் தான் அவை அனைத்தையும் நிராகரித்த தாகவும்,  இத்திட்டத்திற்காக உழைத்த பொருயிளாலர்  ஏ.என்.எஸ.குலசிங்க வின்பெயரை சூட்ட தான் மும் மொழிவதாகவும்  ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். அதன்படி மொரகஹகந்த நீர்தேக்கம் இன்று முதல்  ஏ.என்.எஸ்.குலசிங்க நீர்தேக்கம் என் அழைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் மொரகஹகந்த நீர் தேக்கத்தின்  வேலைகள் இதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி திட்டம் மூலம் எமது தாய் நாட்டை அபிவிருத்தி வெய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மகாவலி திட்டம் தொடர்பாக பாடசாவைiமாணவர்கள் உற்பட சகல தரப்பினரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அந்தளவு இது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். இதற்கு முன்னர்  எஸ்.ஏ. விக்ரமசிங்க முதன் முதலாக மகாவலி பற்றி பேசியுள்ளார்.  அதன் பிரதி பலனாகவே துரித மகாவலிதிட்டத்தின் சகல கட்டங்களும் நடந்துள்ளன.


1954 ம் ஆண்டு மகாவலி பற்றிய ஆய்வுகளும் தேடல்களும் மேற்கொள்ளப்பட்டன.  இதில் மொரகஹகந்த உற்பட பல திட்டங்கள் அடிப்பiடாக உள்ளன. 1970 பெப்வரியில்  அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் வழிகாட்டலுடன்  நீர்பாசன அமைச்சராக இருந்த சி.பி.டி. சில்வா  பொல்கொல்லையில் நீர்தேக்கப் பணிகளை மேற்கொண்டார். 1976 ஜனவரி 8 ம் திகதி அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார்  ரஜரட்வுக்கு நீர் வழங்கினார்.

நானும் அக்காலத்தில் ஒரு பார்வையாளனாக இருந்தேன்.
பொலன்னருவையிலிருந்து பொல்கொல்லைக்கு பஸ்வண்டியில்  வந்தேன்
இந்நாட்டு பல்நோக்க நீர்த்திட்டங்களில் அன்றும் இன்றும் மகாவலியால் மேற்கொள்ளப்பட்ட  பலநோக்ககு அபிவிருத்திகள் பற்றி சகவரும் அறிவர்.


பின்னர் 1977 ன் பின் காலம் சென்ற அமைச்சர்  காமினி திசாநாயக்கா காலத்தில் மகாவலித்திட்டம் துரிதமாக முன் எடுக்கப்பட்டது. 1960 ல் 30 வருடத்திட்டமாக இதனை மேற்கொள்ள ஜர்மன் உற்பட நாடுகள் உதவ முன் வந்தன. ஆனால் காமினி காலத்தில் அதனை மறக்க முடியதாத அளவு பாரிய மற்றும் துரித திட்டமாக மாற்றினார். ரன்தெம்பை, விக்டோரியா, ரந்தெனிகல என பல திட்டங்கள் அதன் பெறுபேறுகளாக  மாறியது.


நான் பாடசாலை செல்லும் காலம் முதல் திருகோணமலை, வவுனியா போன்ற பல பகுதிகளில் மொரகஹகந்த திட்டம் பற்றி பேசுவதைக் கேட்டுள்ளேன். சந்திரிக்கா அம்மையாரும் 1994ல் பொலன்னருவைக்கு வந்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த போது மக்களுக்கு என்ன கூற வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் உடனே மொரகஹகந்த திட்டம் பற்றிக் கூறும் படி அவரிடம் கூறினேன். அவரும் அவ்வாறே கூறினார்.


ஆனால் அது அன்றும் அதன் பின்பும் நிறைவேறவில்லை. பின்னர் மகிந்த ராஜபக்ச காலத்திலும் நான் ரஜரட்ட மக்களது நீர் பிரச்சினை பற்றிக் கூறினேன்.  அதனை மேற்கொள்ள யப்பான் நிறுவனம் ஒன்று முன்வந்துது. நான் டகாவலி அமைச்சராக இருந்த அப்போது  அத்திட்டமும் மேற்கொள்ளாது ஒதுக்கப்பட்டது. எனது முயற்சிஅ ன்றும் பயலன் அளிக்கவில்லை.


அதற்கான சீனா முன்சந்தது. சீனாவின் திட்டத்தையும் அன்று நிராகரித்தனர். நான் மகாவலி அமைச்சராக இருந்த போது எஞ்சினீயர்களுடன் தொடர்பு பட்டேன். ஆனால் எடுத்த எடுப்பிலே  டாக்கடர்களை என்னிடம் ஒப்படை;ததனர். நான் மகாவலி அமைச்சர் என்ற வகையில் என்ஜினேயர்களுடனும் சுகாதார அமைச்சர் என்ற வகையில்  டாக்டர்களுடனும்   வேலை செய்யும் பேறு பெற்றேன்.


இன்றைக்கு 5 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட வேண்டிய மொரகஹகந்த திட்டம் மிக மந்தமாக நடந்தது. இதற்கு 23 ஆயிரம் கோடிகளுக்கு மேல் தேவைப் பட்டது. எனது முயற்சியால் அது இன்று நிறைவடைந்துள்ளது. ஒரு சுரங்கம் 7 கிலோமீற்றர் அகழ வேண்டியுள்ளது. மற்றொன்று  23 கிலோமீட்டர் அகழ வேண்டி இருந்தது. மேற்படி வேலைத்திட்டம் பூர்ர்ரியாகும் போது எமது நாட்டில் பாரி ஒரு விவசாயப் புரட்சியே ஏற்படும்.


விவசாயம் உற்பட மற்றும் துணைச் சேவைகளாக கைத்தொழில், குடிநீர், நன்னீர் மீன் உற்பத்தி உற்பட பல விடயங்கள்  இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.  நாட்டில் இரண்டு வருடங்களாக வரட்சி காணப்படுகிறது. இது எமக்கு மட்டமல்ல ஆசிய நாடுகள் பலவற்றைப் பாபதித்துள்ளது.


தென் இந்தியாவிற்கு இது பலமாகப் பாதிப்பு செலுத்தியுள்ளது. எமக்கு மழை வீழ்ச்சி அதிகமாகக் கிடைக்க வேண்டும் இது மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காகப் பிராத்திக்கிறேன். விவசாயம் போன்ற ஏனைய யோத அபிவிருத்திகள் மகாவலி போல் இதன் மூலம்  அடையலாம். ஹெக்டேயர் 82 ஆயிரம் நீர் கிடைக்க உள்ளது.


ஏனைய மாறறங்கள் காரணமாக சுகாதாரம், பொருளாதாரம் போன்றவைகளும் அபிவிருத்தியாகும் ரஜரட்டையில் சிறுநீரக வியாதிக்கு குடி நீர் முக்கிய காரணமாகும். அதுவும் இத்திட்டம் காரணமாக நீங்கும் நிலை உண்டு. சுற்றாடல், மரம், நீர் நிலைகள் போன்றவற்றைப் பாதுகாப்பது எமது தேசிய கொள்கையாக இருக்க வேண்டும். வாழ்வதற்கான எமது தகைளுக்கு சுற்றாடலுக்கு நாம் மேற்கொள்ளும் மாற்றங்கள் பாதிப்புச்.n சலுத்துகிறது.
அன்று காலம் சென்ற அமைச்சர் காமினி திசாநாயக்கா  இதற்கு சமாந்தரமாக மரம் நடும் திட்டம் ஒன்றையும் மேற்கொண்டார். அது சுற்றாடல் பற்றி ஒரு கண்ணோட்டமாகும்.  1977 ல் மகாவலி கீதம் அன்று பாடப்பட்டது.

இதனைப்பாடியவர்  பிரபல  இசை மேதை அமரதேவயாகும். அப்பாடல்  பாரிய ஆசிர்வாதமாக உள்ளது. அதே போல் இசைக் கலைஞர் அமரசிரி பீரிஸ் இன்று பாடிய மொரகஹகந்த பாடலும் ஆசிர்வாதமாக அமைய பிராத்திக்கிறேன். ஐம்பெரும் நீர் தேக்கங்களில் இறுதியானது இந்த மொரகஹகந்த திட்டமாகும். இதனுடன் தொடர்புடைய சகலருக்கும் நன்றி பாராட்டுகிறேன்.


மொரகஹகந்த திட்டத்திற்கு ஒரு பொருத்தமான பெயரை வைப்போம் என்றனர். நான் அதற்காக பொறியியலாளரான ஏ.என்.எஸ். குலதுங்க அவர்களது பெயரிடப்பட வேண்டும் என முன் மொழிகிறேன். அவர் இத்திட்டத்திற்காக அரும்பாடுபட்டு திட்டமிட்டவர் என்றார்.


இங்கு உரையாற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் பிரதான நீர்த்தேக்கங்களில் ஒன்றான  பொல்கொல்லை நீர்தேக்கத்தை அமைப்பதற்கு முன்னிள்றவர்கள் பலருக்கு நாம் நன்றி தெரிவிக்க்கடமைப் பட்டுள்ளோம். 40 வருடங்களுக்கு முன் பாரிய மகாவலி அபிவிருத்தி பணிகள் ஆரம்மாகின. அன்றைய நீர்பாசன மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கா மேற்கொண்ட துரித மகாவலி திட்டத்தின் விளைவாக பொல்கொல்லை, விக்டோரியா, கொத்மலை, மாதுரு ஓயா, ஹ_ல்இடியாவ, ரன்தெனிகல, உற்பட பிரதான நீர் த்தேகங்கள் பல அயைப் பெற்றன.


யுத்தத்திற்கு முன்பிருந்த இவ்வாறான அபிவிருத்திகள் யுத்தத்தின் பின் அவ்வாறு மேற்கொள்ளப்பட வில்லை. அவ்வாறான  அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்தன. அதன்பின் 2015ல் தெரிவான ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிசேனா அவர்கள் மீண்டும் அவ்வாறான திட்டங்களுக்கு புத்துயிர் அளித்தார். அதன் ஒரு கட்டமாகவே மொரகஹகந்த திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது.
நீர்த் தேக்கங்கள் மூலம் விவசாயத்துறையே குறிப்பாக வளர்ச்சியடைகிறது. விசேடமாக ரஜரட் போன்ற பிரதேசங்களில் நெல் உற்பத்தி மற்றும் நெல் உற்பத்தி அல்லாத  விவசாய உற்பத்திகளினதும் வளர்ச்சிக்கு நீர்தேக்கங்கள் உதவுகின்றன.


திருகோணமலையை பிரதானமானகக் கொண்டு கைத் தொழில் அபிவிருத்திகளை நவீன தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி அப்பிரN துசஙகளில் அமைக்க உள்ளோம். அரசியல் பேதங்களை மறந்து பிரதான  இரு கட்சிகளும் இணைந்து விவசாய முன்னேற்றத்திற்கு உதவி வருகிறோம் குறிப்பாக மொரகஹகந்த நீர் திட்டத்தை குறிப்பிடலாம்.

இதனால் எமது எதிர் காலம் சிறக்கும் என எதிர் பார்கக்கிறேன் என்றார்மொரகஹகந்த நீர்தேக்க ஆரம்ப வைபவம் மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்க 42 வருட நிறைவையொட்டி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உரை. மொரகஹகந்த நீர்தேக்க ஆரம்ப வைபவம் மற்றும் பொல்கொல்ல நீர்த்தேக்க  42 வருட நிறைவையொட்டி  ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உரை. Reviewed by Madawala News on 1/09/2018 09:36:00 AM Rating: 5