Yahya

ஜனாதிபதி மைத்திரி தெரிவானது எப்படி? ( நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இது)


2015ஆம் ஆண்டின் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ தோற்­ப­தற்கு மூன்று பௌத்த குரு­மாரே வெவ்­வேறு வகை­களில் செய­லாற்­றி­யி­ருக்­கி­றார்கள். முத­லா­மவர் மாது­ளு­வாவே சோபித தேரர். இரண்­டா­மவர் கிரம்பே ஆனந்த தேரர். மூன்­றா­மவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகி­யோ­ராவர்.

முத­லி­­ரு­வரும் ஒரு­வ­கை­யிலும் மூன்­றா­மவர் வேறு­வ­கை­யிலும் பங்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சே­காவின் விட­யத்­திலும் உயர் நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் விட­யத்­திலும் மஹிந்த ராஜ­பக்ஷ நடந்து கொண்ட முறைகள் மாது­ளு­வாவே சோபித தேர­ருக்கு வெறுப்­பேற்­றி­யி­ருந்­தன. இது பற்றி இவர் பல­முறை மஹிந்­த­விடம் எடுத்துக் கூறியும் கூட உதா­சீ­னப்­ப­டுத்­தப்­பட்டார்.

கோட்டே நாக­வி­கா­ரையின் உயர் மத குரு­வான மாது­ளு­வாவே சோபித தேரர் அதன் பிற­குதான் மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு எதி­ராகக் கிளம்­பினார். தலதா மாளி­கையில் பூஜை செய்து நாடு முழுக்க வாழும் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த 40 கிளை­களை நிறுவப் போவ­தாகக் கூறி விட்டு யார் உத­வி­னாலும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி போட்­டி­யிட்டால் தோற்கும். குறிப்­பாக ரணில் போட்­டி­யி­டா­விட்­டால்தான் வெல்லும் என்றார். இதனால் ரணில் போட்­டி­யி­டு­வது தடுக்­கப்­பட்­டது.

கிரம்பே ஆனந்த தேரர் அனு­ரா­த­புர ஸ்ரீ சாரா­நந்த விகா­ரா­தி­ப­தியும் ராமன்யா நிகா­யாவின் உப­தே­ச­கரும் தலைமைப் பிக்­கு­வு­மாவார். இவர் டி.எஸ். சேனா­நா­யக்­கவின் காலத்­தி­லி­ருந்தே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ர­வாளர்.

2004 ஆம் ஆண்­டி­லி­ருந்து இக்­கட்சி தொடர் தோல்­வி­களைக் கண்­டதால் விரக்­தி­யுற்­றி­ருந்த இவர் இக்­கட்­சிக்குள் பிள­வு­களும் ஏற்­பட்­டி­ருந்­ததால் மேலும் கவ­லைக்­குள்­ளானார்.

2014 ஆம் ஆண்டு ரணில் பிரிவு, கரு பிரிவு, சஜித் பிரிவு என மூன்­றாக இக்­கட்சி காணப்­பட்­டது. இந்­நி­லை­யில்தான் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை மீண்டும் ஆட்­சிக்குக் கொண்டு வர 17 திட்­டங்­களை கிரம்பே ஆனந்த தேரர் ரணி­லிடம் வழங்­கினார்.

இவை 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்­டு­வரை ஐக்­கிய பிக்­குகள் முன்­ன­ணி­யோடு கலந்து அவர் தயா­ரித்­த­தாகும். இதை அவர் கைய­ளித்த பின் டி.எஸ். சேனா­நா­யக்க போன்ற சிரேஷ்ட தலை­வர்கள் ஸ்தாபித்து நாட்டின் கௌர­வத்தைக் காத்து ஆட்சி புரிந்த இக்­கட்சி இந்த அள­வுக்கு பல­வீ­ன­முறக் காரணம் இவைதாம் என விளக்கி மீளக் கட்­ட­மைக்­கு­மாறும் கோரினார்.

மக்­களின் தேவை­களைச் செவி­ம­டுத்தல், மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்தல், தேசிய பழக்க வழக்­கங்­களை இனங்­கண்டு செயற்­ப­டுதல் ஆகி­ய­வையும் அவற்றில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. அந்த அறிக்­கையை கிரம்பே ஆனந்த தேரர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­கு­ழு­வுக்கும் தபாலில் அனுப்பி வைத்தார். இதை வாசித்­தோ­ருக்கு உயர்­பீ­டத்தில் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்­தது. ஜோன் அம­ர­துங்­கவும், லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் சில­ரோடு ரணிலைக் கண்டு அவ­ரிடம் இதைக்­கூ­றி­ய­போது முதலில் நிரா­க­ரித்த அவர் இவர்­களின் வற்­பு­றுத்­தலால் வாசிக்கும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது. அதன் பின் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு தொலை­பேசி மூலம் தலைவர் நேர­டி­யாக சந்­திக்கத் தயார் என கிரம்பே ஆனந்த தேர­ருக்கு அறி­வித்­தது.

அப்­போது கிராம்பே ஆனந்த தேரர் வேண்டாம். முதலில் பிக்­குகள் முன்­ன­ணி­யோடு பேசுங்கள். பிறகு என்­னோடு பேசலாம் என்றார். அதற்கு ரணில், இல்லை முதலில் உங்­க­ளோடு பேசி­விட்டு ஐந்து நாட்­க­ளுக்குள் பிக்­குகள் முன்­ன­ணி­யோடு பேச­வ­ருவேன் எனக் கூறி செய்­தி­ய­னுப்­பினார். அதன்­படி 2014 ஆம் ஆண்டின் ஆரம்­பத்தில் தன்­னைக்­கா­ண­வ­ரு­மாறு கிராம்பே ஆனந்­த­தேரர் ரணிலை அழைத்தார். லக் ஷ்மன் கிரி­யெல்ல, ஹெரிசன் உட்­பட சிலர் உடன் சென்­றனர்.

கிராம்பே ஆனந்த தேரர் அவர்­களை வர­வேற்று பத்து நிமி­டங்­களில் கட்­சியின் வர­லாற்­றையும் இதற்­கான தனது அர்ப்­ப­ணிப்­பையும் ஞாகப்­ப­டுத்தி விஷ­யத்­துக்கு வந்தார். கட்சி நலனை முன்­வைத்தே கருத்­துக்­களை முன்­வைத்தார்.

முன்பு தன்­னைக்­காண தனது விகா­ரைக்கு வரக்­கூ­டாது என அவர் ரணி­லிடம் கூறி­யி­ருந்­த­போதும் இந்த சந்­திப்­பின்­போது மூன்று வரு­ட­கா­ல­மாக இருந்த கோபத்தைக் கைவிட்டு அன்­பா­கவே பேசினார். எனினும் தீர்க்­க­மான வேண்­டுகோள் அவ­ரது பேச்சில் இருந்­தது.

2004 ஆம் ஆண்டு நீங்கள் தோற்­றபின் 2005 ஆம் ஆண்டு மிலிந்த மொர­கொ­ட­வோடு வந்து நான் உங்­க­ளிடம் என்ன கூறினேன். ஜன­நா­யகத் தலைவர் எனும் வகையில் கட்­சி­யி­லி­ருந்தும் வில­கு­மாறு கூறினேன் அல்­லவா? ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் நீங்கள் தோற்­றவர் எனவே விரும்­பி­ய­வ­ரிடம் தலை­மையைக் கொடுத்து பின்­னா­லி­ருந்து ஒத்­து­ழைத்து கட்­சியைப் பலப்­ப­டுத்த வேண்டும் என்றேன்.

காரணம் 1965 ஆம் ஆண்டு டட்லி சேனா­நா­யக்க ஒதுங்கி ஜே.ஆர். முன்­வந்­த­போது கட்­சியைச் சேர்ந்தோர் ஜே.ஆர். அல்ல டட்­லியே தலை­மைக்குத் தேவை என்­றார்கள். அவ்­வாறே நீங்­களும் இப்­போது தலை­மை­யி­லி­ருந்தும் அகன்றால் இன்னும் 10 வரு­டங்­களில் நீங்­களே தேவை என மக்கள் கோரு­வார்கள் வில­கா­விட்டால் 10 வரு­டங்­க­ளுக்குப் பின் நீங்கள் ஒதுங்க வேண்டும் என ஊர்­வலம் போவார்கள். அதுவே இப்­போது ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்றார். உடனே அனை­வரும் அதன்­ப­டியே செய­லாற்­று­வ­தாக ஏற்றுக் கொண்­டார்கள்.


ஐந்து நாட்கள் கழித்து ரணில், கரு ஜய­சூ­ரிய, ரவி கரு­ணா­நா­யக்க, சஜித் பிரே­ம­தாஸ, சுஜீவ சேன­சிங்க, மங்­கள சம­ர­வீர, திஸ்ஸ அத்­த­நா­யக்க ஆகியோர் உட்­ப­டச்­சிலர் கொள்­ளுப்­பிட்டி தர்­ம­சித்­தி­யா­ராம எனும் விகா­ரையில் பிக்­குகள் முன்­ன­ணியைச் சந்­தித்­தனர். கட்­சியைப் பல­வீ­னப்­ப­டுத்தும் பல விட­யங்­களும் இங்கு ஆரா­யப்­பட்­டன. ஒரே தலை­மையற்ற தலைமைக் குழுவை உரு­வாக்கி கட்சி பலப்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் நான் உங்­க­ளுக்கு அதி­கா­ரத்தைப் பெற்றுத் தருவேன் என கிரம்பே ஆனந்த தேரர் உறு­தி­ய­ளித்தார். அதற்கு உடன்­பட்ட ரணில் இரு மணித்­தி­யா­லங்கள் கழிந்து பெரு­மூச்­சோடு நான் சுகப்­பட்­ட­தாக உணர்­கிறேன். எனது உள்­ளத்தில் இருந்த பெரிய பாரத்தை நீங்­களும் பொறுப்பு ஏற்­றீர்கள் என்றார்.

(லங்­கா­தீப 31.12.2017)

அதன் பின் தலைமைக் குழு செயற்­பட பொருள்­வ­சதி செய்­வ­தா­கவும் பொறுப்­பு­களை எல்­லோரும் ஏற்­கு­மாறும் ரணில் கூறினார். திட்­ட­மிட்­ட­படி இக்­குழு செயற்­ப­டு­கை­யில்தான் மாது­ளு­வாவே சோபித தேரரின் பொது அபேட்­சகர் பற்­றிய செய்தி வெளி­யா­னது. நீதி­யான சமூ­கத்­துக்­கான மக்கள் நட­வ­டிக்கை எனும் பொது அபேட்­ச­க­ருக்­கான கொள்­கை­யோடு 11 திட்­டங்­க­ளுக்­கு­மான உறுதிப் பிர­மாணம் முன்­வைக்­கப்­பட்­டது. முடிவில் கிரம்பே ஆனந்த தேரர் அதற்கு உடன்­பட்டு பொது அபேட்­ச­க­ருக்கு ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ரவு என வாக்­க­ளித்தார். இதன் மூலம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்டுத் தலை­மை­க­ளோடு கட்­சி­யையும் கூட கிராம்பே ஆனந்த தேரர் மாது­ளு­வாவே சோபித தேர­ரிடம் வழங்­கி­விட்டார். அதற்குப் பின் பொருந்­தி­ய­படி ரணிலைத் தவிர்த்து விட்டு பொது அபேட்­ச­க­ராக ஷிராணி பண்­டா­ர­நா­யக்க, ஏ.டி. ஆரி­ய­ரத்ன, கரு ஜய­சூ­ரிய ஆகியோர் பற்றிச் சிந்­தித்­தனர்.


அதன் பிறகு பொது அபேட்­சகர் எனும் தீர்­மா­னத்தின் கீழ் ஒன்று திரண்ட பல தேரர்கள் மற்­று­முள்ள தேரர்­க­ளையும் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை உட்­பட பல மதத் தலை­வர்­க­ளையும் சந்­தித்து ஆட்சி மாற்­றத்தைப் பற்றி வலி­யு­றுத்­தினர்.

முதலில் பௌத்த சிங்­க­ள­வரைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கரு ஜய­சூ­ரி­யவைப் பற்றி யோசித்­தனர். அவரே பொது அபேட்­ச­க­ரா­கலாம் எனக் கேள்­விப்­பட்­டதும் மஹிந்த ராஜபக் ஷவின் தரப்­பினர் அதைத் தடுக்கப் பல்­வேறு தந்­தி­ரங்­க­ளையும் கையாண்­டனர். இந்­நி­லையில் மாது­ளு­வாவே சோபித தேரர் அத்­தங்­கனே ஷாசன ரத்ன தேரர், தல்­பொத தம்­ம­ஜோதி தேரர், கெர­கொல்லே பிய­தஸ்ஸி தேரர், களு­தர சோம தேரர், கோன­கல ஞான­லோக தேரர், பேரா­தெ­னிய தம்ம சேன தேரர், பின்­ன­வல யஸஸ்ஸி தேரர், மஹமான் கட­வல பிய­ரத்ன தேரர், மீவெல்­லேவே தம்­ம­கித்தி தேரர் ஆகியோர் நாடு முழுதும் சென்று பொது அபேட்­ச­க­ருக்­கான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தனர். இந்­நி­லையில் மாது­ளு­வாவே சோபித தேர­ரோடும் கிரம்பே ஆனந்த தேர­ரோடும் இணைந்து 38 அமைச்­சர்கள் செயற்­ப­டவும் முன்­வந்­தனர்.

கரு ஜய­சூ­ரிய பொது அபேட்­ச­க­ராகத் தெரிவு செய்­யப்­பட்டால் அவர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் இணை­ய­வி­ருந்­தனர். ஒரு­முறை மாது­ளு­வாவே சோபித தேரரைக் காண வந்து மஹிந்த ராஜபக் ஷ நாட்டை அழிப்­ப­தாகக் கூறிய மூவர் இப்­போது மஹிந்­த­வோடு இருக்­கின்­றனர்.

 (லங்கா தீப 31.12.2017)

பொது அபேட்­ச­க­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுவில் கரு ஜய­சூ­ரி­யவின் பெயர் முன்­வைக்­கப்­பட்­ட­துமே சஜித் பிரே­ம­தாஸ அதை எதிர்த்தார். யானைச் சின்­னத்­தோடும் பச்சை நிறத்­தோடும் கண்­டிப்­பாக ரணில் போட்­டி­யிட வேண்டும் எனவும் இன்றேல் தான் போட்­டி­யிடப் போவ­தா­கவும் அவர் கூறினார். விஜே­தாஸ ராஜபக் ஷ, ரவி கரு­ணா­நா­யக்க, லக்ஷ்மன் கிரி­யெல்ல, மங்­கள சம­ர­வீர ஆகியோர் அதை எதிர்த்­தார்கள். எனினும் சஜித் பிரே­ம­தாஸ இத் தேர்­தலில் ரணில் போட்­டி­யிட்டால் அவரை வெல்ல வைப்பேன் எனவும் சூளு­ரைத்தார். இதனால் மனம்­மா­றிய ரணில் அடுத்த நாள் நான் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­லேயே போட்­டி­யி­டுவேன் எனக் கூறி­விட்டார். உடனே கிராம்பே ஆனந்த தேரர் ரணிலைக் கண்டு நீங்­களா போட்­டி­யிடப் போகி­றீர்கள் எனக் கேட்டார். ஆம், நானே தான் என ரணில் கூறி­யதும் யார் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பார்கள் என கிராம்பே ஆனந்த தேரர் கேட்டார்.

ஏன் இப்­படிக் கூறு­கி­றீர்கள் என ரணில் வின­வி­ய­போது வெற்­றி­பெறும் அள­வுக்கு வாக்­குகள் இல்லை என்­பதால் தான் சொல்­கிறேன். அப்­படி இருக்­கு­மானால் 27 முறையும் தோற்­பீர்­களா என கிராம்பே ஆனந்த தேரர் கூறி­யதும் இரு­வ­ருக்கும் இடையில் தர்க்கம் நிகழ்ந்­தது. முடிவில் கிராம்பே ஆனந்த தேரர் “நீங்கள் 27 இலட்சம் வாக்­கு­களைப் பெற்று தோற்ற கணக்கில் சஜித்தும் இருக்­க­வில்­லையா? அப்­போது அவர் உங்­களை வெற்றி பெற வைத்­துக்­காட்­டி­யி­ருக்­கலாம் தானே. இதில் ஒரு சதி இருக்­கி­றது. எனக் கூறி­யதும் ரணில் திடுக்­குற்றார். பிறகு தேரர், நீங்கள் உலகம் ஏற்­றுக்­கொண்ட தலை­வ­ராக இருந்தும் ஏன் இதை அறி­ய­வில்லை? மஹிந்­தவை ஆத­ரிக்கும் வியா­பா­ரி­களும், அர­சியல் தலை­வர்­களும் இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்றார்.

உடனே ரணில் நல்­லது. நான் ஒத்­து­ழைக்­கிறேன் யார் அந்த பொது அபேட்­சகர்? எனக் கேட்டார். அதற்கு தேரர் கரு ஜய­சூ­ரி­யவே பொது அபேட்­சகர். அவர் வென்று ஆறு மாதத்தில் இரா­ஜி­னாமாச் செய்வார். ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து நேர்­மை­யான தேர்­தலை நடத்­திய பின் சென்று விடுவார் என்றார். சரி போகா­விட்டால் என்ன செய்­வது என ரணில் வின­வி­ய­போது, இல்லை நிச்­சயம் அவர் போய்­வி­டுவார்.

ஆறு மாதங்கள் கழிந்த பின் ஒரு நாழிகை கூட கரு ஜய­சூ­ரிய பத­வியில் இருக்­க­மாட்டார் என கிராம்பே ஆனந்த தேரர் உறு­தி­யாகக் கூறினார். இந்த சந்­திப்பு நிகழ்ந்து ஒரு­வாரம் கழிந்த பின் ரணில் போய் சந்­தி­ரிக்­காவைக் கண்டார். அப்­போது கரு ஜய­சூ­ரி­யவைப் பற்றி பேச்சு எழுந்­த­போது விருப்­ப­மின்­மையை வெளிப்­ப­டுத்­திய சந்­தி­ரிக்கா ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரான மைத்­தி­ரிபால சிறி­சேன தற்­போது மஹிந்த ராஜபக் ஷவோடு விர­ச­மாகி இருப்­ப­தாகக் குறிப்­பிட்டார். அதன் பிற­குதான் பொது அபேட்­ச­க­ருக்­கான கவ­ன­ஈர்ப்பு மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது திரும்­பி­யது.

அவரே பொது அபேட்­சகர் எனும் சங்­க­தியை தேரர்கள் வேட்பு மனு­வுக்கு இரு நாட்கள் இருக்­கை­யில்தான் தெரிந்து கொண்­டார்கள். இதைக் கேட்­டதும் மாது­ளு­வாவே சோபித தேரர் கவ­லை­யுற்றார். பின்னர் இவ்­வி­ரு­வ­ரிலும் யாரா­யினும் சரிதான் மஹிந்­தவை அகற்ற வேண்டும் என மாது­ளு­வாவே சோபித தேரர் மனதைச் சரிப்­ப­டுத்திக் கொண்டு தைரி­ய­மாகத் தனது முயற்­சியைத் தொடர்ந்தார். மைத்­தி­ரி­பால சிறி­சேன வேட்பு மனுத் தாக்கல் செய்து முடிந்­ததும் முன்பு கரு ஜய­சூ­ரி­ய­வுக்­காக ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணை­வ­தாகக் கூறிய ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் 38 அமைச்­சர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வர­வில்லை. எனினும் மைத்­தி­ரி­பால சிறி­சேன வென்­றதும் அவர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வோடு சேர்ந்து கொண்­டார்கள். தலைவர் ரணிலே விட்டுக் கொடுத்­தி­ருக்­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ள­ரான திஸ்ஸ அத்­த­நா­யக்­க­வுக்கு என்ன நடந்­தது? தான் செய­லா­ள­ராக இருக்கும் கட்சி மாற்றுக் கட்­சியின் செய­லா­ள­ருக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்­கி­யது அவ­ருக்குப் பிடிக்­க­வில்லை.

இதனால் அவர் மஹிந்த ராஜபக் ஷவோடு சேர்ந்து போட்­டி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக மைத்­தி­ரி­பா­லவின் கையொப்பம் போல் இட்டு போலி ஆவ­ணத்தை வெளி­யிட்டார். அத்­தோடு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சாய­லுடன் இருந்த ஒரு­வரைத் தேடிப்­பி­டித்து அவ­ரது படத்தை பொது­வி­ளம்­ப­ரங்­களில் வெளி­யிட்டு மைத்­தி­ரியே போட்­டி­யி­லி­ருந்து வில­கு­வது போல் பொது­வி­ளம்­ப­ரமும் செய்­தார்கள். இவை இரண்டும் வெற்­றி­பெ­ற­வில்லை. மஹிந்த தோற்றே போனார்.

இதற்கு மாது­ளு­வாவே சோபித தேர­ரி­னதும் கிராம்பே ஆனந்த தேர­ரி­னதும் செய்­கையால் தனக்­கு­ரிய வாக்­கு­வங்­கியில் பாதியை மஹிந்த ராஜபக்ஷ இழந்­தி­ருந்தார்.

வெற்­றிக்­கம்­பத்தை மைத்­திரி தாண்­டவே சிறு­பான்­மை­களின் வாக்­குகள் அவ­ருக்கு உத­வின. பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒட்­டு­மொத்­த­மாக வாக்­க­ளிக்­கா­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. முஸ்­லிம்கள் ஏன் 100 வீதம் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­தார்கள்?

2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்­டு­வரை கல­கொட அத்தே ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்குக் கொடு­மைகள் புரிந்­த ­போது மஹிந்த ராஜபக் ஷ கண்டு கொள்­ளா­தி­ருந்தார். காரணம் சிங்­கள வாக்­கு­வங்­கியில் அவர் 100 வீத நம்­பிக்­கையை வைத்­தி­ருந்­ததால் முஸ்லிம் வாக்­கு­வங்­கியைப் பொருட்­ப­டுத்­தா­த­தே­யாகும். இதனால் வழ­மை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு 70 வீதம் வாக்­க­ளிக்கும் முஸ்­லிம்கள் மைத்­தி­ரிக்கு 100 வீதம் கொடுத்­தார்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ தோற்­றபின் சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளால்தான் நான் தோற்றேன் என்று கூறி சிங்­கள மக்­களை உசுப்­பேற்­றி­விட்டார். உண்­மையில் பாதி சிங்­கள மக்­க­ளிடம் மன­மாற்றம் ஏற்­ப­டா­தி­ருந்­தி­ருக்­கு­மாயின் மைத்­திரி வென்­றி­ருக்க மாட்டார். பெரும்­பான்மைச் சமூ­கத்தின் அப­ரித வாக்­கு­க­ளுக்கு முன் சிறுபான்மைகளின் வாக்குகள் கரைந்தே போயிருக்கும் .

உண்மையில் ஜனநாயக மீட்சிக்காகவும் சமூக நீதிக்காகவும் மாதுளுவாவே சோபித தேரர் முன்னெடுத்த போராட்டமே மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைத்திருந்தது. அவர் நினைத்த பொது அபேட்சகர் இப்போது கட்சித்தலைவராக ஆகியிருக்கிறார். இவரது பெயரை முன்வைக்கப்பட்ட போதும் அவர் திருப்தி­­­யுறவில்லை. ரணிலின் பெயர் முன் வைக்கப்பட்டபோது கிராம்பே ஆனந்த தேரர் விரும்பவில்லை. கரு ஜயசூரிய­வின் பெயர் முன்வைக்கப்பட்டபோது சந்திரிகா வேண்டாம் என்றார். ஷிராணி பண்டாரநாயக்கவும் ஏ.டி.ஆரியரத்ன­வும் விடுபட்டார்கள். இவைதாம் நிகழ்ந்தவை­யாகும்.

ஏ.ஜே.எம். நிழாம் ( கேசரி : 6/1/2018)
ஜனாதிபதி மைத்திரி தெரிவானது எப்படி? ( நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இது) ஜனாதிபதி மைத்திரி தெரிவானது எப்படி? ( நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இது) Reviewed by Madawala News on 1/06/2018 02:38:00 PM Rating: 5