Yahya

ரணிலுக்கு ஆதரவை தெரிவித்த பொது ஜன பெரமுன பிரபல உறுப்பினர் ரத்தரன்.


மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அண்மைக்காலத்தில் பொது ஜன பெரமுனவின்
பிரபல உறுப்பினருமான ரத்தரன் எனப்படும் சனத் பியபேம சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் மொனராகலை மாவட்ட காரியலயத்தில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை சந்தித்து அவரது ஆதரவை தெரிவித்தார்.

மேலும் 03 ஆம் திகதி சிறிகொத்த ஐதேக தலைமை காரியாலயத்தில் வைத்து, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கட்சி அங்கத்துவத்தைப் பெற்றார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
ரணிலுக்கு ஆதரவை தெரிவித்த பொது ஜன பெரமுன பிரபல உறுப்பினர் ரத்தரன். ரணிலுக்கு ஆதரவை தெரிவித்த  பொது ஜன பெரமுன பிரபல உறுப்பினர் ரத்தரன். Reviewed by Madawala News on 1/04/2018 09:32:00 AM Rating: 5