Yahya

நாட்டின் இரண்டாவது தலைநகரான கண்டியின் தேவை என்ன...? விபரிக்கிறார் ரவூப் ஹகீம்.



-ஜே.எம்.ஹபீஸ்-
நாட்டின் இரண்டாவது தலைநகரான கண்டிக்கு உரிய இடமும் அதற்கான அபிவிருத்தியும் இதுகாலவரை நடக்காமை கவலைக்குறிய விடயமாகும்.

குறிப்பாக கண்டி நகரில் வாகன நெரிசல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. என்று நகர நிர்மாண நீர்வளங்கள் அமைச்சர்  றவூப் ஹகீம் தெரிவிததார்.

கண்டி செயலகத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது -

வாகன நெரிசலுக்கு ஒரு தீர்வு அவசரமாகக் காணப்பட வேண்டும்.
எமக்கு தேவையான வாகன தரிப்பிடம் இன்மை, கண்டி நகரினூடாக நாட்டின் இதர இடங்களுக்குச் செல்ல வரும் வாகன நெரிசல் போன்றன முக்கியமானதாகும்.

கண்டிக்குள் வந்தால் சகல அரச தரப்பினரதும் கால நேரம் கண்டி நகரில் வீணாகிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு தீர்வாக கெட்டம்பே, கட்டுகஸ்தோட்டை, பல்லேகலை போன்ற கண்டி நகரின் பிரவேச வாயில்களில் இருந்தே  பஸ் சேவைகளை மேற்கொள்வது ஒரு மாற்று வழியாக சிந்திக்கப்படுகிறது.


வேட்புமனு தாக்கள் செய்யப்பட்ட காலங்களில் கண்டி வருகைதர முயற்சித்தோம் வாகன நெரிசல் போன்ற காரணங்களால் பெறுமதி மிக்க நேரத்தை கண்டி நகருக்குள் புகுந்து வீணாக்க சிலர் விரும்பவில்லலை.

இதனால் பலதரது வேட்புமனுக்கள் சரியாகப் பரசீலிக்கப்படாது தள்ளு படி செய்யப்பட்டதாகவும் அறிகிறோம்.

யாழ்பாணத்தில் இராணுவ முகாமிற்காக பொது இடம் பாவிக்கப்படுகிறது.  அதே நேரம் பொதுத் தேவைகளுக்காக இராணுமுகாம்கள் அகற்றப்படுட்டும் வருகின்றன.

எனவே கண்டியிலும் சில இராணுவ முகாம்கள் சற்று மாற்றப்பட்டு இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கான சவால்கள் பல ஏற்படலாம். அதனையும் சாமாளிக்கத்ததான்  வேண்டும் எனறார்.

நாட்டின் இரண்டாவது தலைநகரான கண்டியின் தேவை என்ன...? விபரிக்கிறார் ரவூப் ஹகீம். நாட்டின் இரண்டாவது தலைநகரான கண்டியின் தேவை என்ன...? விபரிக்கிறார் ரவூப் ஹகீம். Reviewed by Madawala News on 1/08/2018 10:13:00 AM Rating: 5