Yahya

பாதை தெளிவாகிவிட்டது, பயணிக்க நாம் தயாரா?இலங்கைவாழ் முஸ்லிம்களின் இன்றைய அரசியல் நிலைமையினை 


எடுத்துக்கொண்டால் கப்பலிலிருந்து தவறிக்கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருப்பவனுடைய நிலைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றது. கப்பலில் இருந்து தவறி விழுந்தவன் மறுபடியும் தோணியில் ஏறுவதற்கே பயப்படுவான் என்பது கண்கூடு.

அதுபோலத்தான் இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலவரமும் காணப்படுகின்றது. ஒரு புறத்தில் இனவாதமும் உரிமை மறுப்புக்களும் வாட்டி வதைக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் நம்பி வாக்களித்த அரசியல்வாதிகள் பாதிவழியில் வைத்துக் கழுத்தறுத்த கபடத்தனமான சூழ்ச்சிகளும் இந்த சமூகத்தை அநாதரவான நிலைக்குத் தள்ளிவிட்டன.

இதனால் நமது சமூகம் இனியும் யாரைத்தான் நம்புவது என்றொரு விரக்தியுற்ற நிலையில் இன்று நாதியற்று நிற்கின்றது.

இதற்கு மிகவும் பிரதானமான காரணிகளில் ஒன்றுதான் நமது பாரம்பரிய அரசியல்வாதிகளுடைய மாற்றமில்லாத அரசியல் பாணியாகும். அரசியல் என்றால் அது ஒரு சாக்கடை என்ற கருத்தாக்கமே நமது இந்தப் பாரம்பரிய அரசியல்வாதிகளுடைய செயற்பாடுகளில் இருந்துதான் தோற்றம் பெற்றதோ என்று சந்தேகம் கொள்கின்ற அளவுக்கு இவர்களுடைய செயற்பாடுகள் இன்று மாற்று மதத்தவர்களையும் முகம் சுளிக்க வைக்கின்றன.

இருந்தும் காலத்திற்குக் காலம் அல்லாஹ் இந்த சமூகத்தைத் தத்தெடுப்பதற்காக சில அபூர்வமான மனிதர்களை அறிமுகப்படுத்துவது வழமையாகும். அந்த வகையில்தான் இன்று இந்த சமூகத்தில் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு சமகாலத்தில் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஒரு அரசியல் அருட்கொடையாக நாம் பொறியிலாளர், சகோதரர் ஷிப்லி பாறூக் அவர்களை பார்க்க முடிகின்றது.

இன்று நம்மத்தியில் வாழ்கின்ற பாரம்பரிய அரசியல்வாதிகளால் பல தசாப்த காலங்களாக பிரதேச, மாகாண, தேசிய மட்டங்களில் பாடுபட்டு அடையப்பெற்ற மக்கள் செல்வாக்கினை தன்னுடைய மிகக் குறுகியகால மாகாண சபை அதிகாரத்தின் மூலமாக இலகுவாகவே சம்பாதித்துக்கொண்டார்.

இஸ்லாமிய அரசியல், முன்மாதிரி அரசியல் என்று பசப்பு வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருகின்ற சாரார்களால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அடைய முடியாத இலக்குகள் பலவற்றை தன்னுடைய கடந்த ஐந்துவருடகால அதிகார கால எல்லைக்குள் அடைந்துகொண்டவர் சகோ. ஷிப்லி பாறூக் என்றால் அதில் மிகையில்லை.

இதற்கு மிகவும் பிரதான காரணமாக இருப்பது அவரிடம் குடிகொண்டுள்ள அதிகார, பதவிப்பற்றற்ற நற்பண்பேயாகும். அதிகாரத்திற்காகவும் பதவிக்காவும் இன்று சுய கௌரவத்தையும் இஸ்லாமியன் என்கின்ற தனித்துவத்தையும் இழந்து முர்தத்துக்ளின் காலடிகளில் தஞ்சம் கோரி அந்த முர்தத்துக்ளுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து பிறந்த மண்ணின் மார்க்க விழுமியங்களை சிதைக்கின்ற அந்த தீய எண்ணம் சகோதரர் ஷிப்லி பாறூக்கிடம் கிஞ்சித்தும் கிடையாது.

இன்றைய காலசூழலில் இஸ்லாத்தை வெறும் வாயளவில் உச்சரித்துக்கொண்டே செயற்பாட்டளவில் அதற்கு சம்பந்தம் இல்லாமல் நடந்துகொள்கின்ற அரசியல்வாதிகளுக்கு முன்னால் இந்த ஷிப்லி பாறூக் வித்தியாசமானவர். அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தால் இஸ்லாத்தை குழி தோண்டிப்புதைத்தேயாக வேண்டும் என்ற சித்தாந்தத்தை தன்னுடைய மார்க்கத்தை விட்டுக்கொடுக்காத உறுதிமிக்க செயற்பாடுகளால் தகர்த்தெறிந்தவர்.

பதவியையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்காகவே பல மோசடிகளையும் பித்தலாட்டங்களையும் மேற்கொள்கின்ற அதேநேரம் இஸ்லாமிய மார்க்கத்தையே புறந்தள்ளுகின்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தன்னிடம் அதிகாரம் இருந்த சந்தர்ப்பத்திலேயே உண்மைக்கும் நேர்மைக்கும் மார்க்கரீதியான விழுமியங்களுக்கும் செயலுருவம் கொடுத்த ஒருவர் இந்த ஷிப்லி பாறூக் என்றால் அதில் மிகையில்லை.

இஸ்லாமிய அரசியல் என்று மேடைகளில் பேசிக்கொண்டே முகத்தில் தாடியை வளர்ப்பதற்கும் திராணியற்ற நிலையில், குத்து விளக்கேற்றி, சிலைகளுக்கு மாலையணிவித்து, அந்நிய பெண்களுடன் கைலாகு கொடுத்து, ஆடல், பாடல், இசை  நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, ஏற்பாடு செய்து மக்களை ஏமாற்றுகின்ற குள்ளநரிகளுக்கு மத்தியில்,

பகிரங்க மேடைகளிலேயே கூடியிருக்கின்ற மக்களுக்கு தொழுகை நேரத்தை ஞாபகமூட்டி, தனக்கு மலர் மாலை அணிவிப்பதை தடுத்து, மங்கள விளக்கேற்றுவதை மறுத்து, பெண்களோடு கைகுலுக்குவதை புறக்கணித்து முகத்தை நிறைத்த முழுமையான தாடியுடன் கம்பீரமாகவும் தனித்துவமாகவும் அரசியல் செய்கின்ற ஒருவர்தான் இந்த ஷிப்லி பாறூக்.

அது மட்டுமன்றி இந்த காத்தான்குடி மண்ணிலிருந்து அத்வைத, பயில்வானிச வழிகெட்ட சித்தாந்தங்கள் வேரோடு களையப்படவேண்டும் என்றும் பகிரங்க மக்கள் மன்றங்களில் மிகவும் கடுமையாக வலியுறுத்திய ஒரேயொரு அரசியல்வாதியும் இவரென்றால் அது  மிகையில்லை.

இவ்வாறு இன்றைய சமகால சூழலில் நேர்மை, வாய்மை, மார்க்க விழுமியங்கள் அனைத்திலுமே விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒருவர் என்றால் அது சிறு பிள்ளைக்கும் தெரியும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்தான் என்பது.

இவைதவிர, பொதுமக்கள் அனைவரோடும் இடைத்தரகர்கள் இல்லாத நேரடியான தொடர்பினைப் பேணி வரக்கூடிய ஒருவராகவும் சகோ. ஷிப்லி பாறூக் இருக்கின்றார். நமது பகுதியில் கோலோச்சுகின்ற பல அரசியல்வாதிகளைப் பொறுத்தவரைக்கும் அவர்களை சந்திக்க, ஒரு தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்த அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களாகிய நமக்கும் இடையில் பல இடைத்தரகர்கள் இருப்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்.

அந்த இடைத்தரகர்களை பெரியவர்களாக்கி, அவர்களை "கவனித்து" அதன் பின்னரே குறித்த அரசியல்வாதியை சந்திகின்ற வாய்ப்புக்கள் நமக்குக்கிடைகின்றன. ஆனால் சகோ. ஷிப்லி பாறூக்கிடம் இந்த ஜால்ராக்கள், இடைத்தரகர்கள் யாருமே கிடையாது. சமூகத்தில் எந்தவொரு பொதுமகனாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லாமல் நேரடியாகவே சந்தித்து தமது தேவைகளை முன்வைத்து உரையாடக்கூடிய, அவற்றை தீர்த்துக்கொள்ளக்கூடிய நடைமுறைகளை நாம் காணலாம்.

மேலும் பொய், பித்தலாட்டம், வாக்குமீறல், நம்பிக்கை மோசடி என்னும் தீய பழக்கங்கள் இவரிடம் கிடையாது. இறைவனுக்கு அஞ்சிய, அந்த இறைவனின் திருப்தியை மட்டுமே நாடுகின்ற நற்குணமும் நற்பண்புகளும் இணைந்த ஒரு நன்மனிதராக இவர் இருப்பதே மக்கள் அதிகளவாக சகோ. ஷிப்லி பாறூக்கை விரும்புவதற்கான முதன்மைக்காரணமாகும்.

அந்தவகையில் மாகாண மட்டத்தில் தனக்குக் கிடைக்கப்பெற்ற சிறியளவிலான அந்த அதிகாரத்தின் மூலமாக மக்களுக்கு உண்மைக்கு உண்மையாக உழைத்து நமது நன்மதிப்பை வென்ற இந்த ஷிப்லி பாறூக்கின் கரங்களை பலப்படுத்துவது நம் அனைவருக்குமான ஒரு கட்டாயக் கடமையாகவே இருக்கின்றது. 

நிலையான ஒரு கொள்கையின்றி, உரிமைகளை மீட்பதற்குப் பலமான ஒரு குரலின்றி, அபிவிருத்திகளுக்கு ஒரு வளமின்றி எடுப்பார் கைப்பிள்ளையாக இந்நாட்டில் வாழ்கின்ற இந்த சமூகத்தை இஸ்லாமியன் என்ற தனித்துவத்துடனும் கொள்கைப்பிடிப்புடன் கூடிய நெஞ்சுறுதியுடனும் வழிநடாத்துவதற்கு ஏற்ற ஒரு தலைமையை இப்போது நாம் சரியாகவே இனங்கண்டுகொண்டோம்.

எனவே அந்தத்தலைமையை தவறாமல் நம்முன்னால் நிலை நிறுத்துவோம். அத்தலைவனுடைய கரங்களை பலப்படுத்தி நம்மை ஆள்கின்ற சக்தியாக நாம் மனதார ஏற்று திடசங்கற்பம் பூணுவோம்.

ஆக்கம் A.L Azik 
காத்தான்குடி தெளஹீத் ஒன்றியம்
பாதை தெளிவாகிவிட்டது, பயணிக்க நாம் தயாரா? பாதை தெளிவாகிவிட்டது, பயணிக்க நாம் தயாரா? Reviewed by Euro Fashions on 1/01/2018 06:36:00 AM Rating: 5