Yahya

கடந்த ஆண்டு ஓரினச் சேர்க்கை உற்பட அனாச்சாரங்களில் ஈடுபட்ட இலங்கையர்கள். அதன் ரிசல்ட் வந்தாச்சு.


கடந்த ஆண்டில் எச்.ஐ.வி. நோயாளர்கள் 280 பேர் கண்டறிப்பட்டதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் பணிப்பாளர் சிசிர லியனகே கூறினார்.

அந்த 280 பேரில் 220 பேர் ஆண்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் அவர் கூறினார்.

எச்.ஐ.வி. தொற்றாளர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதுவரையில் 4000 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் இருப்பதாக ஊகிப்பதாகவும், அவர்களை கண்டறிவதற்காக பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் 25 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் தவிர சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற ஆண்கள் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்து ​வோர் இந்த பரிசோதனைகளுக்கு கட்டாயம் உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த எச்.ஐ.வி. பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொற்றுவதை தடுப்பதற்காக அவர்களை தௌிவுபடுத்தும் திட்டங்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆணு​றைகள் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றாலும் கூட நூற்றுக்கு 50 வீதமானோரே ஆணுறைகளை பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

எச்.ஐ.வி தொற்றை இல்லாதொழிப்பதாக இருந்தால் பாதுகாப்பற்ற பாலியல் உறவில் இருந்து மகன்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் பணிப்பாளர் சிசிர லியனகே கூறினார்.
கடந்த ஆண்டு ஓரினச் சேர்க்கை உற்பட அனாச்சாரங்களில் ஈடுபட்ட இலங்கையர்கள். அதன் ரிசல்ட் வந்தாச்சு. கடந்த ஆண்டு  ஓரினச் சேர்க்கை உற்பட அனாச்சாரங்களில் ஈடுபட்ட இலங்கையர்கள். அதன் ரிசல்ட் வந்தாச்சு. Reviewed by Madawala News on 1/03/2018 04:28:00 PM Rating: 5