Yahya

(வீடியோ இணைப்பு) மரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மூன்றரை வயது சிறுமி.


ஹோமாகம – தெடிகமுவ, லெனகல பிரதேசத்தில் மூன்றரை வயது குழந்தை மரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது

இந்தச் சம்பவம் இன்று(02) இடம்பெற்றுள்ளது. இதில் ஓஷ்தி மதுபாஷினி என்ற குழந்தையே  இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குழந்தை வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கும் வேளை,  தனது தாத்தாவின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுப்போதே, மரத்தில் சிக்குண்டு குழந்தை  படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறு மரத்தில் சிக்குண்ட குழந்தையை  சிகிச்சைக்காக ​ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் தாய் தனது 11 வயது மகனிடம் குழந்தையை விட்டு வெளியே சென்றுள்ளார். இதன்போதே குறித்த சம்பவம்  இடம்பெற்றுயிருப்பதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மீபே பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் வெளியான வீடியோ.
(வீடியோ இணைப்பு) மரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மூன்றரை வயது சிறுமி. (வீடியோ இணைப்பு) மரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த மூன்றரை வயது சிறுமி. Reviewed by Madawala News on 1/02/2018 04:38:00 PM Rating: 5