Yahya

இரு கொலைகளை செய்த வழக்கில் விடுதலையான நபர் வாகனத்தில் செல்லும்போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். Sh



இரட்டைக்கொலை வழக்கில் பிணையில் விடுதலைபெற்ற நபரொருவர் இனந்தெரியாதோரின் துப்பாகிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

 

பன்னல - பள்ளம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் பன்னல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

இரு கொலைகளை செய்த வழக்கில் விடுதலையான நபர் வாகனத்தில் செல்லும்போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். Sh இரு கொலைகளை செய்த வழக்கில் விடுதலையான நபர் வாகனத்தில் செல்லும்போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். Sh Reviewed by Euro Fashions on 1/08/2018 05:22:00 PM Rating: 5