Ad Space Available here

நாட்டில் ஊழல்கள், களவுகளை செய்பவர்களுக்கு தண்டனை வழங்க ஷரீஆ சட்டம் இருக்க வேண்டும். பெளத்த அமைச்சரின் ஆதங்கம்.


(ஏ.ஆர்.ஏ.பரில்)
எமது நாட்டில் இடம்பெறும் பிணைமுறி ஊழல்கள், களவுகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்க ளுக்கு தண்டனை வழங்க ஷரீஆ இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.

மக்களது பணத்தினை கொள்ளையடிப்பவர்களுக்கு இவ்வாறான சட்டம் மூலமே கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியின் செயலாளரும் கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடக வியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்

"கடுமையான தண்டனை வழங் கக்கூடிய சட்டம் ஒன்று தேவை. ஆனால், அவ்வாறான ஒரு சட்டம் எமது நாட்டில் இல்லை. அதனால்
எமது நாட்டில் தொடர்ந்து வழக்குகளை விசாரிக்கக் கூடிய நடைமு றையொன்று இருந்தால் நல்லது.

மிக விரைவில் அமைச்சரவையின் அங்கீகாரம் மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு ஊழல்கள், களவுகள், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட நீதிமன்றம் தேவை.

 மக்கள் இறக்கும் காலத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதல்ல. காலதா மதமில்லாமல் ஊழல்களுடன் சம் பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். பிணைமுறியுடன் தொடர்பு பட்டு களவெடுத்த நபர் இலங்கையிலேயே இருக்கிறார். ஆனால் இதற்கு அனுசரணை வழங்கியவர் வெளிநாட்டில் இருக்கிறார். இது பிரச்சினையில்லை.


சர்வதேச சட்டத்தின்மூலம் இன்டர்போல் பொலிஸ்மூலம் அவரை நாட்டுக்குள் கொண்டுவர முடியும், எல்.ரீ.ரீ.ஈ. காலத்தில் இவ்வாறு வெளிநாட்டிலிருந்த ப்லர் சட்டத டவடிக்கைகளுக்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.


பிணைமுறி ஊழல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் விசா ரணைகள் நடத்துவதற்கும் ஜனாதி பதி நேற்றே உரிய அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கிவிட்டார்.

ஊழல் செய்த பணம் விரைவில் அவர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்ளப்படுவதுடன் அவர்களது சொத்துகளும் அரசுடமையாக்கப் படும்.
அத்தோடு சம்பந்தப்பட்டவர் களுக்கு தண்டனையும் வழங் கப்படும். தண்டப்பணமும் அறவிடப்படும்.

ஏனென்றால், வழக்குகளுக்காக அரசாங்கம் அதிகளவு பணத்தை செலவிட வேண் டியுள்ளது. கள்வர்களிடமிருந்து பணத்தை மீளப்பெற்றுக் கொள்வ தற்காக ஊழல் மோசடிகள் தொடர் பிலான சட்டத்தில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.


மத்திய வங்கிக்கு எதிர்காலத்தில் அரசியல் கலபடமற்ற நியமனங்கள் வழங்கப்படுவதற்குத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நிதிமோசடிகள் இடம்பெறாத வகையில் சில விதிகளில் மாற்
றங்கள் செய்யப்படவுள்ளன.

மீண்டும் ஓர் ஆணைக்குழுவை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நியமிக்கவுள்ளார். ஸ்ரீரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா விமான சேவை என்பன வற்றில் நிலவிய ஊழல்கள், மோசடிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெறுவதற்கே இந்த ஆணைக்குழு நியமிக்கப்ப வுள்ளது.

இதன்மூலம் இரு விமான சேவைகளிலும் ஊழல் செய்தவர்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக் கப்படுவார்கள் என்றார்.

நாட்டில் ஊழல்கள், களவுகளை செய்பவர்களுக்கு தண்டனை வழங்க ஷரீஆ சட்டம் இருக்க வேண்டும். பெளத்த அமைச்சரின் ஆதங்கம். நாட்டில் ஊழல்கள், களவுகளை செய்பவர்களுக்கு தண்டனை வழங்க ஷரீஆ சட்டம் இருக்க வேண்டும். பெளத்த அமைச்சரின் ஆதங்கம். Reviewed by Madawala News on 1/20/2018 10:53:00 AM Rating: 5