Yahya

கண்டிப் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வுடன் இறுதி கிரியைகள்.


-மொஹொமட்  ஆஸிக்-

கண்டி அங்கும்புரை பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகர் டீ.ஆர்.எம்.மத்தும பண்டார (வயது 57),  பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.

மேற்படி பொலிஸ் பரிசோதகர், கடந்த ஒட்டோபர் மாதம் 30ஆம் திகதி, கடமைமுடிந்து விடு திரும்பும்போது, வழியில் இவரை இடமறித்த சிலர், கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மேற்படி பரிசோதகர், கடந்த மூன்று மாதங்களாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறுதி கிரியைகள், அலவத்துகொடை பொதுமயானத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் மேற்படி பொலிஸ் அதிகாரி பதவி உயர்வுபெற்றுள்ளார்.  இவரது இறுதி கிரியைகள் பூரண பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றது.
கண்டிப் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வுடன் இறுதி கிரியைகள். கண்டிப் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு பதவி உயர்வுடன் இறுதி கிரியைகள். Reviewed by Madawala News on 1/04/2018 12:23:00 PM Rating: 5