Yahya

'மாண­வர்­க­ளுக்­கான விசேட செய­ல­மர்வு' போர்வையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது.


மாண­வர்­க­ளுக்­கான விசேட செய­ல­மர்வு நடத்­து­வ­தாக பணம் சேக­ரித்து மோச­டியில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் பெண் ஒருவர் உட்­பட மூன்று சந்­தேக நபர்கள் இரத்­தி­ன­புரி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எதிர்­வரும் ஆகஸ்டில் இடம்­பெ­ற­வுள்ள புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­க்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்­காக விசேட எழுத்து, வாய்­மொ­ழி­மூல செய­ல­மர்வை இரத்­தி­ன­பு­ரி­யி­லுள்ள விகாரை ஒன்றில் கடந்த 31 ஆம் திகதி நடத்­து­வ­தாக தெரி­வித்து, பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள பிள்­ளை­களின் பெற்­றோ­ரிடம் தலா 650 ரூபாவை அதற்­கு­ரிய கட்­ட­ண­மாக அற­விட்­டுள்­ளனர்.

கடந்த 31 ஆம் திகதி 8. 30 மணி முதல் நண்­பகல் 12. 30 மணி­வ­ரையில் குறித்த செய­ல­மர்வு இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும், அதற்­கான கட்­ட­ணத்தை தாம் கூறும் கணக்கில் வைப்­பி­லிட்டு, அதற்­குண்­டான பற்­றுச்­சீட்­டுடன் சமு­க­ம­ளிக்­கு­மாறும் பெற்­றோ­ரிடம் கூறிய சந்­தே­க­ந­பர்கள், இந்த செய­ல­மர்வில் நடத்­தப்­படும் பரீட்­சையில் சிறந்த புள்­ளி­களைப் பெறும் பிள்­ளை­க­ளுக்கு சான்­றி­தழ்கள் வழங்­கு­வ­தா­கவும், இந்த சான்­றி­தழை பெற்றுக் கொள்ளும் பிள்­ளைக்கு எதிர்­வரும் ஆகஸ்டில் இடம்­பெ­ற­வுள்ள பரீட்­சையில் மேல­தி­க­மாக 6 புள்­ளிகள் கிடைக்கும் எனவும் ஏமாற்றி பணம் வசூ­லித்­துள்­ளனர்.

சந்­தேக நபர்கள் கூறி­ய­தனை நம்பி, அவர்கள் கூறி­ய­வாறு பணத்தை வைப்­பி­லிட்ட பெற்றோர், தமது பிள்­ளை­க­ளுடன் உரிய தினத்தில் அவ்­வி­கா­ரைக்குச் சென்­றுள்­ளனர். 4 மணித்­தி­யா­லங்கள் இடம்­பெறும் எனக் கூறப்­பட்ட செய­ல­மர்வு வெறு­மனே 30 நிமி­டங்­களில் நிறை­வ­டைந்­த­மையால் அதி­ருப்­தி­ய­டைந்த பெற்றோர், ஆர­வாரம் செய்­த­துடன், இரத்­தி­ன­புரி பொலிஸ் நிலை­யத்தில் இது குறித்து முறைப்­பாடும் செய்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, இரத்­தி­ன­புரி பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் கொட­க­வெல, நிவி­தி­கல, ஓப­நா­யக்க ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த 23, 28, 35 வய­து­க­ளு­டைய மூன்று சந்­தேக நபர்­களை கைது செய்­துள்­ளனர்.

சந்­தேக நபர்களை இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருந்த இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்திட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

-மெட்ரோ-
'மாண­வர்­க­ளுக்­கான விசேட செய­ல­மர்வு' போர்வையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது. 'மாண­வர்­க­ளுக்­கான விசேட செய­ல­மர்வு' போர்வையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது. Reviewed by Madawala News on 1/02/2018 02:53:00 PM Rating: 5