Yahya

தனியார் தொலைக்காட்சி கலையகத்திற்குள் நுழைந்து செய்திப் பணிப்பாளரைத் தாக்கி கத்தியால் குத்த முயற்சி.


யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிபர் ஒருவர், அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர், அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று  மாலை இடம்பெற்றது.

இதேவேளை, சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய தயா மாஸ்டர் என, அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ சோதனைகளின் பின் வெளியேறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி கலையகத்திற்குள் நுழைந்து செய்திப் பணிப்பாளரைத் தாக்கி கத்தியால் குத்த முயற்சி. தனியார் தொலைக்காட்சி கலையகத்திற்குள் நுழைந்து செய்திப் பணிப்பாளரைத் தாக்கி கத்தியால் குத்த முயற்சி. Reviewed by Madawala News on 1/09/2018 10:47:00 AM Rating: 5