Yahya

மலேஷியாவின் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இலங்கையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தார்.


மலேஷியாவின் ஜோஹூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னு இஸ்காந்தர், இலங்கை மருந்தககைத் தொழில் துறையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மையில் முதலீடு செய்துள்ளார்.

Datuk Patrick Lim Soo Kit எனும் முன்னணி மலேசிய  நிறுவனத்துடன் கூட்டிணைந்தே சுல்தான் முத லீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்ப டுகிறது.

 களுத்துறை மாவட்டத்தின் வெளிப்பன்ன பிரதேசத்தில் 50 ஏக்கர் பரப்பில் மருந்தாக்கல் வலயம் ஒன்றை அமைக் கப்பட ஒப்புதல் அளித்து அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சுல்தான், Daluk Patrick Lin Soo Ki நிறுவன அதிகாரிகள் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை மீதப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைவாக, குறித்த மருந்தாக்கல் வலயம் உள்நாட்டு மருந்தாக்கல் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமது வேலைத் தளங்களை நிறுவிக்கொள்ள இடமளிக்கப்படும் என தெரி விக்கப்படுகிறது.

நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த மருந்தாக்கல் வலயம்
பிராந்திய ரீதியாக விளம்பரப்ப டுத்தப்பட்டு மேலதிக முதலீட் டாளர்களை அதில் முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருந்தாக்கல் வலயம் மலேஷியா முன்னணி நிறுவ  Pharma Zone இனால்  நிர்வகிக்கப்படும் அதேவேளை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கையின் சுகாதார அமைச்சர் தலைமையில் நிய மனங்கள், தகைமை அடைவுகள்
மேற்பார்வை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருந்தாக்கல் வலயம் ஒரு வருடத்தினுள் தனது முழுமையான செயற்பாடு களை ஆரம்பிக்கும் எனவும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலைமை வெகு விரைவில் மாற்றப்படும் என அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் டாக்டர் சயுர சமரசுந்தர தெரிவித்துள்ளார்.

மலேஷியாவின் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இலங்கையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தார். மலேஷியாவின் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இலங்கையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தார். Reviewed by Madawala News on 1/12/2018 11:41:00 AM Rating: 5