Yahya

சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை!- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி தேர்தல் ஆணையாளர் உத்தரவு!!

(றீமாஸ் அஹமட்)
மதத் தலைவர்கள் மத ஸ்தலங்களைகொண்டு தேர்தல் நடவடிக்கைகளில்ஈடுபட முடியாது.
 மீறும் பட்சத்தில் மதத்தலைவர்களின் குடியுரிமை 4 வருடங்களுக்கு பறிக்கப்படும்.

இச்சட்டத்தின் கீழ் சாய்ந்தமருதுபள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில்ஈடுபட முடியாது என உதவி  தேர்தல்ஆணையாளர் திலின விக்கிரமரட்னதெரிவித்ததுடன் மக்கள்பணிமனையினையும் அகற்றுமாறும்உத்தரவிட்டார்.

நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் எதிர்நோக்கும்பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்புஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர்மட்டகலந்துரையாடல் இன்று (06) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஐ.எம்.ஹனீபா தலைமையில்இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவிதேர்தல் ஆணையாளர் திலினவிக்கிரமரட்ன, அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர்கே.விமலநாதன் உள்ளிட்ட பொலிஸ்உயர் அதிகாரிகள், வேட்பாளர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,

இந்துக் கோவில், கிறிஸ்தவ தேவாலயம், பண்சாலை, பள்ளிவாசல்கள்போன்றவற்றின் மதத் தலைவர்கள், மதஸ்தானங்களை கொண்டு தேர்தல்நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இதுதேர்தல்கள் சட்டத்தின் 81 பிரிவின் இதுகுற்றமாகும். மீறிவோருக்கு குடியுரிமை 4 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும்தெரிவித்தார்.

இதனடிப்படையில் சாய்ந்தமருதுபள்ளிவாசல் தலைவர் உள்ளிட்டநிர்வாகத்தினர் தேர்தல் நடவடிக்கைகள்ஈடுபட முடியாது. அத்தோடு பள்ளிவாசல்உள்ளேயும் வெளியேயும் தேர்தல்பிரச்சார நடவடிக்கைகளில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட உலமாக்கள்செயற்பட முடியாது அத்துடன்தேர்தலுடன் சம்பந்தப்பட்டகாரியாலயங்களைக் கூட திறக்கமுடியாது எனவும் தெரிவித்தார். 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலைஅமைதியான முறையில் ஜனநாயகமுறையில் நடாத்துவதற்கு தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய கண்டிப்பான சட்டங்களைஅமுல்படுத்தியுள்ளார். இதற்குகட்டுப்பட்டு தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்கள் நடக்க வேண்டும்அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.


சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை!- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி தேர்தல் ஆணையாளர் உத்தரவு!! சாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை!- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி தேர்தல் ஆணையாளர் உத்தரவு!! Reviewed by Euro Fashions on 1/06/2018 04:56:00 PM Rating: 5