Yahya

தெல்தோட்டை சம்பவம் எச்சரிக்கை... வாடகைக்கு இருந்த நபர் காலை சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து இலட்சக்கணக்கில் கொள்ளை.


மயக்க மருந்து சேர்க்கப்பட்ட இடியப்பத்தை காலை உணவாக வீட்டாருக்குக் கொடுத்து, அவர்கள் மயங்கிய பின்னர் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தோட்டையில் நேற்று பதிவாகியுள்ளது.

இதன்போது பல இலட்ச ரூபா பெறுமதியான நகை கொள்ளையிடப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

தெல்தோட்டை பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு அறையெடுத்து, நபர் ஒருவர் தங்கி இருந்துள்ளார். குறித்த நபர் நேற்று காலை உணவுக்காக இடியப்பம் வாங்கி வந்துள்ளார்.

குறித்த இடியப்பத்தை வீட்டாருக்கு உண்பதற்கு அவர் கொடுத் துள்ளார்.
வீட்டாரும் அந்த இடியப்பத்தை உட்கொண் டதும் மயக்கமுற்றுள்ளனர்.

இதனையடுத்து வீட்டில் அலுமாரியில் இருந்த இரண்டரை பவுண் பெறு மதியான தங்கச் சங்கிலி, பெண்டன் ஒன்று, 7 மோதிரங்களை கொள்ளையிட்டு சந்தேக நபர் தப்பிச் சென் றுள்ளார்.


இந் நிலையில் மயக்க மருந்து கலந்த இடியப் பத்தைச் சாப்பிட்ட வீட்டார்
பலமணி நேரத்தின் பின்னர் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

அவர்களின் நிலைமை கவலைக்கிட மாக இல்லை என தெரி வித்த வைத்தியசாலை அதிகாரி ஒருவர் அவர்களின் உடல் நிலை தேறி வருவ தாகத் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் கம்பளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மென்டிஸின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தெல்தோட்டை சம்பவம் எச்சரிக்கை... வாடகைக்கு இருந்த நபர் காலை சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து இலட்சக்கணக்கில் கொள்ளை. தெல்தோட்டை சம்பவம் எச்சரிக்கை... வாடகைக்கு இருந்த நபர் காலை சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து இலட்சக்கணக்கில் கொள்ளை. Reviewed by Madawala News on 1/02/2018 11:11:00 AM Rating: 5