Yahya

மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் போலீஸ் கணவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.


மாத்தளை வில்கமுவ பிரதேச சபைக்குப் போட்டியிடுவதற்கென வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பெண் வேட்பாளர் ஒருவரின் கணவர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்பதால் வில்க முவ பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திலிருந்து அவ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு, மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ஐ.பீ.டி.சுகதபால பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் வேண்டுகோள் விடுத் துள்ளார்.


குறித்த பெண் வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் சார்பில் போட்டியிடுவதுடன், அவர் தமது தேர்தல் பிரசார அலுவல கத்தையும் தமது இல்லத்தி லேயே அமைத்து கரும மாற்றி வருகின்றார்.

 பெண் வேட்பாளரின் கணவரான பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் தமக்கு இதுவரையில் எவ்வித முறைப்பாடு களும் கிடைக்கப்பெறாத போதிலும், எதிர்வரும் காலங்களில் இவ்விவகாரம் வெளியிற் தெரியவரும் பட்சத்தில் பல் வேறு அழுத்தங்கள் ஏற்ப டுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதால், முன் கூட்டியே அப் பொலிஸ் உத்தியோகத்தரை அப்பிர தேசத்திலிருந்து அகற்றுவ தற்குத் தான் தீர்மானித்ததா
கவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் இல்லத்தில் அரசியல் கட்சி அலுவலக மொன்றை ஸ்தாபிப்பது என்பது தேர்தல் சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதாலும், அவ் உத்தியோகத்தரின் மனைவி அரசியல் கட் சியொன்றின் வேட்பா ளராக இருப்பதாலும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் பெற்றுக் கொடுப்பது பொருத்தமானது என மாத்தளை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சானிக்க ரூபசிங்ஹ தெரிவித்தார்.

மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் போலீஸ் கணவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் போலீஸ்  கணவர் இடமாற்றம் செய்யப்பட்டார். Reviewed by Madawala News on 1/04/2018 04:31:00 PM Rating: 5