Yahya

ரோசி சேனாநயக்கவையும் அவருடன் போட்டியிடுபவர்களையும் வெற்றி பெறச் செய்யுங்கள்.


((அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு மாநகரத்தின் மேயர் வேட்பாளராக ஜ.தே.கட்சி -உலக பிரச்சித்பெற்றவர், முன்னாள் மலேசிய நாட்டின் தூதுவர், மாகாண சபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ,மகளிர் சிறுவர் விவகார அமைச்சராக இருந்து சிறந்த அனுபவங்களை பெற்றவர் ரோசி சேனாநயக்க. அவர்  தற்பொழுது  தனது நிர்வாகச் செயலாளராகவும்  கடமையாற்றுகின்றார்.


இந்த நல்லாட்சியினை ஏற்றதும் எமது அரசு  முன்னாள் ஜனாதிபதி  பெற்ற  கடன்களிலிருந்து  சிறுகச் சிறுக  மீண்டுவருகின்றோம்.அடுத்த 4 ஆண்டு கால ஆட்சியில் இலங்கையின் வர்த்தக மையத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை வகுத்து இலங்கை மீளவும் ஒரு சிறந்த வர்த்தக நாடாக  கட்டியெழுப்பி வருகின்றோம்.


இந்த காலத்திற்குள் கொழும்பினையும் 2020 வரை ஒர் சிறந்த மாநகரமாக  மாற்றுவதற்காக  நீங்கள் ரோசி சேனாநாயக்காவையும்  அவருடன் போட்டியிடும் ஏனைய உறுப்பினர்களையும்  தெரிவு செய்யுங்கள்.என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க    ஜ.தே.கட்சியின்  கொழும்பு  ஹெவலொக் டவுன் பிரதேசத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றினார்.  


இக் கூட்டம்  இன்று (11) ஜ.தே.கட்சியின் கொழும்பு கிழக்கு  அமைப்பாளரும் மேயர் வேட்பாளருமான ரோசி சேனாநாயக்காவின் தலைமையில் நடைபெற்றது.   


அத்துடன் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் ,ஹரீன் பீரிஸ்,  மற்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க , இரான் விக்கிரமரத்ன  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான் ஆகியோறும் கலந்து கொண்டனர் 


அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,


1960 காலப்பகுதியில் இருந்து இப்பிரதேசம் முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர். ஜெயவர்தனா காலத்தில் இருந்து கொழும்பு கிழக்கு  வடக்குப்  பிரதேசங்கள்  தொடர்ந்து ஜ.தே.கட்சி வெற்றிவாகை சூடும் ஒரு பிரதேசமாகும்.  


கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பை அழகு படுத்துவதாகச் சில வேலைத்திட்டங்களை வகுத்தார்கள்.  ஆனால் ஒரு நிலையான திட்டமிடப்படாத திட்டங்களை வகுத்து  பாரிய  கடன்களையே பெற்றுள்ளார்கள். தற்பொழுது அக் கடன்களை கூட மேல் மாகாண அபிவிருத்தி  மா  நகர அபிவிருத்தி அமைச்சு  செலுத்தி வருகின்றது.


நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான்  -  ஜி.எஸ்.பி திட்டத்தினை மீள பெற்றுக் கொடுத்தோம்.   மஹிந்த ராஜபக்சவினால் பெற்ற  பாரிய கடன் சுமைகளில் இருந்து  இருந்து மீண்டு வருகின்றோம்.   தற்பொழுது எமது ஆட்சியில்  கொழும்பில் உல்லாச பிரயாணிகள் வருகை  பெறுகி வருகின்றது.  


மேலும் , ஹம்பாந்தோட்டை விமான நிலையம், துறைமுகங்களை மீள வர்த்தக மையமாக ஏற்படுத்தி வருகின்றோம்.கொழும்பு நகரின் மின் வழு  சக்திக்காக” எல்.எம். ஜி”    மின்வழு சக்தி 3 திட்டத்தினையப்பாண், இந்தியா போன்ற நாடுகள் இத் திட்டங்களை அமுல்படுத்த உள்ளன.  


 நடுத்தர வருமாணம் மற்றும் முடுக்கு வீடுகளில் வாழும்  கொழும்பு வாழ் மக்களுக்காக    50 ஆயிரம் வீடுகள்  கொண்ட தொடர்மாடி வீடுகள்  நிர்மாணிப்பதற்கு   நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. 


அத்துடன் நடுத்தர வர்கத்தினர்  தமது வீடுகளை அரச அல்லது  தணியார் வீடுகளை வாங்குவதற்காக  தேசிய சேமிப்பு வங்கி  ஊடாக  அவர்கள் 6 வீத வட்டிக்கு கடன் பெறலாம் இதற்காக அரசாங்கம் 75 பில்லியன் ருபாவை தேசிய சேமிப்பு வங்கிக்கு  இவ் ஆண்டு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. 


கண்டி, ஹம்பாந்தோட்ட அதி வேக பாதை ஆரம்பிக்கப்பட்டதும். கொழும்பு ஒரு  பாரிய வர்த்தக மையமாகும்.  கொழும்பில் வீடுகள். உல்லாச ஹோட்டல்கள்,மட்டுமே  அமையப்பெறும்  கொழும்பில் உள்ள  தொழிற்சாலைகள் கொழும்புக்கு வெளியே கொண்டு செல்லப்படும். அத்துடன் தற்பொழுது கொழும்பில் பாரிய பிரச்சினையாக  வாகன நெறிசல் பிரதேசமாக காணப்படுகின்றது. 


அதற்காக  ராஜகிரியவில் இருந்து பத்தரமுல்ல, மற்றும் கட்டுநாயக்க நெடும்பாதையில் இருந்து கொழும்பை அடையக்கூடிய புதிய  மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளது.


கொழும்பில் குப்பைகள் கழிவுகள்  சேமித்து முகாமைத்துவம் செய்வதற்காக  மேல்மகாண மநாகர அமைச்சு  வேறு ஒரு பிரதேசத்தில்  அதனை அமுல்படுத்தி வருகின்றது. அத்துடன் டெங்கு பிரச்சினையும்  கொழும்பில்  போதைப்பொருள்  பாவிக்கும் பிரதேசமாக மாறி வருகின்றது. இதற்காக பொலிஸ், மநாகர சபை, பள்ளிவாசல், கோவில் பண்சலை, இளைஞர் பாராளுமன்றம்,சம்பந்தப்டுத்தி இதற்காக ஒரு விழிப்புணர்வு மற்றும் தெளிவுட்டல் திட்டம் வகுக்கப்படுகின்றது. 


போதைப் பொருள்  தொழில் செய்பவாகள்,  அதனை பாவிப்பவர்கள், அதற்கு உதபுபா்கள் கடத்துபவர்களுக்கு எதிராக  கடும் தீவிர தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கொழும்பு மாநகர சபையில் போதை பாவிப்பவர்களை தொழிலுக்கு இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் ரோசியை பிரதமர் வேண்டிக்கொண்டார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க .


ரோசி சேனாநயக்கவையும் அவருடன் போட்டியிடுபவர்களையும் வெற்றி பெறச் செய்யுங்கள். ரோசி சேனாநயக்கவையும் அவருடன் போட்டியிடுபவர்களையும் வெற்றி பெறச் செய்யுங்கள். Reviewed by Madawala News on 1/11/2018 10:23:00 PM Rating: 5