Yahya

இலங்கை வந்து அடித்துக்கொண்ட சுற்றுலா பயணிகள். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி.


பதுளை, எல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த மார்டின் சோவா என்ற சுற்றுலாப் பயணியே கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே நாட்டை சேர்ந்த பீட்டர் மலின் என்ற நபரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செக் குடியரசை சேர்ந்த இரண்டு தம்பதியினர் எல்ல ஹல்பே பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.

இவர்களில் ஆண்கள் இருவருக்கு இடையில், சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தேகநபர் மற்றைய நபரை கத்தியால் குத்தியுள்ளார்.

எல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அழகியவண்ணவின் ஆலோசனையின் படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள செக் குடியரசை சேர்ந்த சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்
இலங்கை வந்து அடித்துக்கொண்ட சுற்றுலா பயணிகள். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி. இலங்கை வந்து அடித்துக்கொண்ட சுற்றுலா பயணிகள். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on 1/06/2018 04:42:00 PM Rating: 5