Yahya

மில்லியன் கணக்கான வருமானங்கள் உப்பு வெளி பிரதேச சபைக்கு கிடைக்கின்ற போதும் அபிவிருத்திகள் போதுமானதாகவில்லை. #திருகோணமலை.


இலங்கையில் அதிகூடிய வருமானம் கொண்ட ஒரு பிரதேச சபையாக திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்பு வெளி) பிரதேச சபை காணப்படுகிறபோதும் அதன் பிரதேச அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை ஆட்சியாளர் காட்ட வில்லை.

 திருகோணமலை நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமலை நவம் இவ்வாறு தெரிவித்தார்

வரோதய நகரில் பிரதேச அபிவிருத்தி மற்றும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் முன் னாள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் நடைபெற்றபோது திருமலை நவம் மேற்கண்டவாறு கூறினார்.


இக் கலந்துரையாடலில் பிரதேச சபை முதன்மை வேட்பாளர் டாக்டர் ஞான குணாளன், வேட்பாளர்கள் திருமதி. ராதலக்சுமி பாக்கியராஜா, சந்தான குமாரி கமலேஸ்வரன்,  நித்தி மாஸ்டர் மற்றும் பிரதேச மக்கள் புத்தி ஜீவிகள் என பலர் கலந்து கொண்டனர்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் பிறிமா மா ஆலை, ரோக்கியோ சீமேந்து, ஜ.ஓ.சி, வேண்டோல் சிறிலங்கா, நிலக்கரி ஏற்றுமதி நிறுவன மாகிய பென்சஸ், ஆடைத் தொழிற்சாலைகள் மாபிள் பீச், கன்னியா இன்னும் புகழ் பெற்ற பல உல்லாச ஹொட்டல்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து வருடந் தோறும் ஏராளமான வரிகள், வருமானமாக கிடைக்கின்றன.

இவைமட்டுமன்றி உல்லாசப் பயணிகளை கவரும் மாபிள் பீச், கன்னியா வெந்நீர் ஊற்று, ஆடைத் தொழிற் சாலை ஆகியவற்றிலிருந்து மில்லியன் கணக்கான வருமானங்கள் இப்பிரதேச சபைக்கு கிடைக்கின்ற போதும் இப்பிரதேச அபிவிருத்திகள் போதுமானதாகவில்லை,  இன்னும் மக்கள் கிரேவல் ரோட்டுக் களிலையே பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


உப்பு வெளிப் பிரதேசம் வளமும் வனப்பு முள்ள பிரதேசமாக காணப்படுகிற போதும் அழகான கடற்கரைப் பிரதேசங்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்கப்படுகிறது. குத்தகைக்கு விடப்படுகிறது இதனால் இப்பிரதேசங்களில் வாமுகின்றவர்கள் அன்னியமாக்கப்படுகிறார்கள் வேலை வாய்ப்புக்கள் பறிக்கப்படுகிறது.
தேவையற்ற கலாச்சாரங்கள் பரப்பப்படுகிறது.


பிறமாவட்டத்தவரின் ஊடுருவல்கள் அதிகமாக மாறுகிறது இந் நிலமைகள் தடுக்கப்பட வேண்டும் எமது பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் விற்கப்படும் காணிகள் தடுக்கப்பட வேண்டுமாயின் பிரதேச சபையின் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலமுள்ளதாக கொண்டு வரப்படுவதன் மூலமே இந் நிலமைகள் தடுக்கப்படலாம் என்றார்.
மில்லியன் கணக்கான வருமானங்கள் உப்பு வெளி பிரதேச சபைக்கு கிடைக்கின்ற போதும் அபிவிருத்திகள் போதுமானதாகவில்லை. #திருகோணமலை. மில்லியன் கணக்கான வருமானங்கள் உப்பு வெளி பிரதேச சபைக்கு கிடைக்கின்ற போதும் அபிவிருத்திகள் போதுமானதாகவில்லை. #திருகோணமலை. Reviewed by Madawala News on 1/10/2018 02:22:00 PM Rating: 5