Yahya

முச்சக்கரவண்டி - வேன் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு.

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி மற்றும் ஹயேர்ஸ் ரக வேன'  ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த அனர்த்தம் நேற்று (2) மாலை  நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டி - வேன் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு. முச்சக்கரவண்டி - வேன் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 1/03/2018 06:41:00 AM Rating: 5