Yahya

அடுத்து வரும் எமது ஆட்சியில் பிணைமுறி மோசடிக் காரர்களுக்கு தண்டனை வழங்குவோம்.


நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சியில் இருக்கும் வரையில் மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­மாட்­டாது. எனினும் அடுத்து வரும் அர­சாங்க ஆட்­சியின் போது குறித்த
மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­காரம் 2015 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லேயே விஸ்­வ­ரூபம் எடுத்­தது. அக்­கா­லப்­ப­கு­தியில் அது தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறு பொலிஸ் மா அதி­ப­ருக்கு நான் கடிதம் ஒன்றை அனுப்­பினேன். எனவே குறித்த விடயம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்­பி­லான ஆவ­ணங்­களை சட்­டமா அதி­ப­ருக்குத் தெரி­யப்­ப­டுத்­தியுள்­ள­தா­கவும் பொலிஸ் மா அதிபர் எனக்குப் பதில் அனுப்­பி­யி­ருந்தார்.

பின்னர் சட்­டமா அதி­ப­ரிடம் குறித்த அது பற்றி எழுத்­து­மூலம் கோரினேன். அதற்கு அவர் பதி­ல­ளிக்­க­வில்லை. அது குறித்து பாரா­ளு­மன்­றிலும் நான் தெரி­யப்­ப­டுத்­தினேன். அத்­துடன் அம்­மோ­ச­டிக்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி 2016 ஆம் ஆண்டு முதல் போராட்­டங்­க­ளையும் நடத்­தி­யது.

மேலும் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­விலும் முறைப்­பாடு செய்தோம். பிர­த­ம­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் நான் முறைப்­பா­டு­செய்­தி­ருந்தேன். அது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு என்­னிடம் அறிக்கை ஒன்றை பெற்­றுக்­கொண்­டது.

ஆகவே நான் பொய்­யான முறைப்­பா­டொன்றை செய்­திருந்தால் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு எனக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­தி­ருக்கும். எனினும் எனது முறைப்­பாடு தொடர்பில் இது­வ­ரையில் விசா­ர­ணை­கூட நடத்­த­வில்லை.

அவ்­வா­றான நிலையில் பிணை­முறி மோசடி தொடர்பில் ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்தார். அந்த ஆணைக்­குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பின்னர் ஏனைய விசா­ர­ணைகள் அனைத்தும் தடைப்­பட்­டன. ஆகவே தற்­போது ஆணைக்குழு விசா­ரணை முடி­வு­பெற்­றுள்ள நிலை­யில் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­களம் என்­பன தமது விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­குமா?

மேலும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சியில் இருக்கும் வரையில் மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் மீது சகல குற்­றச்­சாட்­டு­க­ளையும் திணித்து அவ்­வி­வகா­ரத்தை மூடி­ம­றைப்­ப­தற்கே எதிர்பார்க்கின்றனர்.

எனினும் அடுத்து வரும் அரசாங்க ஆட்சியின் போதே குறித்த மோசடிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஆணைக்குழு அறிக்கை குறித்த அறிவித்தலானது மக்களை ஒரு வகையான மாயை உலகத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்து வரும் எமது ஆட்சியில் பிணைமுறி மோசடிக் காரர்களுக்கு தண்டனை வழங்குவோம்.  அடுத்து வரும்  எமது ஆட்சியில் பிணைமுறி மோசடிக் காரர்களுக்கு தண்டனை வழங்குவோம். Reviewed by Madawala News on 1/06/2018 02:09:00 PM Rating: 5