Ad Space Available here

பொதுஜன பெரமுன கட்சியில் தனியாளாக சம்மாந்துறையை கலக்கிய அறிமுக வேட்பாளர் அப்துல் காதர்.


இம்முறை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் 2018 பிரேதச சபைத் தேர்தலில் புதிய அறிமுகமாக  அப்துல் காதர் என்பவரின் தலைமையில் வேட்பாளர்களை பொதுஜன பெரமுனையில் நிறுத்தி தனது முதலாவது அரசியல் பயணத்தில் பல ஆளும் கட்சியில் இருக்கும் மிகப்பெரிய அமைச்சர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் மத்தியில்  754 வாக்குகளை பொதுஜன பெரமுனைக்குப் பெற்றுக் கொடுத்து தனது முதலாவது வாக்குப் பலத்தை நிலைநிறுத்தியுள்ளார்.


ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 3 அமைப்பாளர்களும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மிக நீண்டகால அமைப்பாளரும்  சேர்ந்து பெற்ற வாக்குகள் 4976.
எனவே, இவருக்குரிய ஆதரவைத் தெரிந்து கொள்ள முடியும்.


கிழக்கு மாகாணத்தில் எண்ணிக்கையின் அடிப்படையில் முதலிடத்தை பெற வைத்ததட்காக வாக்களித்த அனைவருக்கும் இவர் தனது  இனிய நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேற்றில் தனது கட்சியான பொதுஜன பெரமுன இலங்கையில் 231 சபைகளை கைப்பற்றி பெருவெற்றி பெற்றுள்ளதால் இன்ஷா அல்லாஹ் அடுத்த அரசாங்கமாக ஆட்சியமைக்கும் பட்சத்தில் தமது சேவைகளை மேலும் தொடர்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறார்.

தகவல் : எம் எம் முஹம்மட் அலி
சம்மாந்துறை



பொதுஜன பெரமுன கட்சியில் தனியாளாக சம்மாந்துறையை கலக்கிய அறிமுக வேட்பாளர் அப்துல் காதர். பொதுஜன பெரமுன கட்சியில் தனியாளாக சம்மாந்துறையை கலக்கிய அறிமுக வேட்பாளர் அப்துல் காதர். Reviewed by Madawala News on 2/13/2018 05:32:00 PM Rating: 5