Wednesday, May 4, 2016

thumbnail

நேற்று மிக ரகசியமாக இலங்கை வந்த "கேசினோ கிங்" ஜேம்ஸ் பெக்கர் !

I
கெசினோ கிங் என அழைக்கப்படும் அவுஸ்ரேலியா நாட்டு கோடிஸ்வர வர்த்தகர் கிரவ்ன் கெசினோ உரிமையாளர் ஜேம்ஸ் பெக்கர் மிக ரகஸியமாக முறையில் இலங்கை வந்துள்ளதாக கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்....

கடந்த அரசாங்கத்தின் போது மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட அவுஸ்ரேலியா நாட்டு கோடிஸ்வர வர்த்தகர் ஜேம்ஸ் பெக்கர் மிக ரகசியமான முறையில் இலங்கை வந்துள்ளார்.

நேற்று மிக ரகசியமாக இலங்கை வந்துள்ள அவர் இன்று ஹில்டன் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் இவர் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் வெளியிட்ட போது தற்போதய அரசில் அங்கம் வகிக்கும் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் விமர்சனம் செய்தனர்.

இன்று அவர் மிக ரகசியமாக நாட்டுக்குள் வந்துள்ளார் இது தொடர்பில் அரசு தெளிவுபடுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More»

thumbnail

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜமீல் முயற்சிக்கிறார்..


(அகமட் எஸ். முகைடீன்)

சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபையை சம்பந்த்தப்பட்டவர்கள் உடனடியாக வழங்க முன்வரவேண்டும், எதிர்வரும் றமழானுக்கிடையில் சாய்ந்தமருது நகர சபை வழங்கப்படாது விடுமானால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துவோம் என்று ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதோடு அவரின் கோமாழித் தனத்தையும் எடுத்துக் காட்டுவதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

சிராஸ் மீராசாஹிப் மேலும் தெரிவிக்கையில், உண்மை என்னவென்றால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் முயற்சியினால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மண்றம் கிடைக்கும் காலம் வெகுவிரைவில் உள்ளது. றமழானுக்கிடையில் கிடைப்பதற்கான எந்தச் சாத்தியக் கூறும் இல்லை என்பதை நான் அறிந்தேன். இந்தச் செய்தியினை அறிந்த ஜெமீல் சாய்ந்தமருது மக்களின் அந்த அபிலாஷையானது தனது முயற்சியால் நடைபெற்றதாக மக்களுக்கு காண்பிப்பதற்காகவே குறித்த விடயம் தொடர்பாக இதுவரை காலமும் வாய் மூடி மௌனியாக இருந்த ஜெமீல் றமழானுக்கு முன்னதாக கிடைக்காவிட்டால் சத்தியாக்கிரக போராட்டம் செய்வதாக சொல்லுகிறார். இது ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கான முயற்சியே அன்றி வேறில்லை.  

குறித்த சத்தியாக் கிரக போராட்டம் யாரின் கவனத்தை ஈர்ப்பதற்காக?, மொட்டையாக சம்பத்தப்பட்டவர்கள் என்றால் யார் அவர்கள்?, அமைச்சர் றிசாத் பதியுதீனா அல்லது அமைச்சர் றவூப் ஹக்கீமா?. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் வாக்குதியை நிறைவேற்றவில்லை எனத்தெரிவிப்பது. இச்சத்தியாக்கிரக போராட்டம் றவூப் ஹக்கீமின் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில் காணப்படுகின்றது. 

நடுநிலையாக பார்த்தால் அவரது அந்த சத்தியாக் கிரக போராட்டம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரானதாக அமைய வேண்டும். ஏனெனில் றிசாத் பதியுதீன் ஜெமீல் சார்ந்த கட்சியின் தலைவராக இருப்பதோடு ஒரு கெபினட் அமைச்சராகவும் காணப்படுகின்றார். அது மாத்திரமன்றி கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் ஜெமீல் என்னிடம் தேசியப்பட்டியல் கேட்கவில்லை, அவர் சாய்ந்தமருதின் நகர சபை கோரிக்கையினை மாத்திரமே முன்வைத்து எமது கட்சியில்  இணைந்து கொண்டார், அதனை தாம் வழங்குவோம் எனவும் தெரிவித்தார். எனவே பூச்சாண்டி காட்டாது குறித்த கோரிக்கையின் வெற்றியினை துரிதப்படுத்த அவர் சார்ந்த கட்சியின் தலைமையினை வலியுறுத்துவதை விடுத்து வெறுமனே வீரவசனங்கள் பேசி மக்களை மடையர்களாக்க விளைய வேண்டாம்.

ஏதோ பெரும் அபிவிருத்திகளை சாய்ந்தமருதுக்கு செய்த ஒரு அரசியல்வாதி போன்று தன்னை அடையாளப்படுத்த முணையும் ஜெமீல் கல்முனை மாநகர சபையில் ஆரம்பித்த அவரது அரசியல் மாகாண சபை வரை சென்ற  காலப்பகுதியில் குறிப்பிடும் படியாக எந்த ஒன்றையும் சாய்ந்தமருதுக்கோ அல்லது வேறு எந்த ஊருக்குமோ செய்தது  கிடையாது. அவர் சாய்நதமருதுக்கு துரோகமே செய்தார். சாய்ந்தமருதுக்கு என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை தடுக்கவே முற்பட்டார். இதனை யாவரும் அறிவீர்கள். 

சாய்ந்தமருது மண் பெற்ற கல்முனை மாநகர பிதா என்ற அரசியல் அந்தஸ்தை இல்லாதொழிக்க செயல்பட்டார், ஜெமீல் ஒரு சில சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நெருக்குதலுக்குள்ளாக்கி சாய்ந்தமருது பெற்ற அந்த அந்தஸ்தை இழக்கச் செய்தார். அத்தோடு சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி அபிவிருத்தி செய்யப்பட்டபோது அதற்கான கொமிசன் ஜெமீலுக்கு கிடைக்கவில்லை என்று அந்த அபிவிருத்தியினை குறையில் நிப்பாட்டிய பெருமை ஜெமீலையே சாரும். சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை எனது முயச்சியால் வெற்றி பெறும் தறுவாயில் அதனை தடுத்து நிறுத்திய பெருமையும் ஜெமீலையே சாரும். தற்போதைய விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களினால் சாய்ந்தமருது பீச் பார்க் எனது  காலப்பகுதிக்கு முன்னதாக அபிவிருத்தி செய்தபோது அதனையும் உடைத்தெறிந்தவர் இந்த ஜெமீல். இவ்வாறு ஜெமீல் சாய்ந்தமருதுக்கு இழைத்த தூரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

சாய்ந்தமருதுக்கு தூரோகமிழைத்த வரலாற்றைக் கொண்ட ஜெமீல் தனது குள்ள நரி விளையாட்டை விடுத்து, இனியாவது சாய்ந்தமருது மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் அமைச்சர் றிசாத் பதியுதீனால் வழங்கப்பட்டுள்ள சுகபோகங்களுக்கு சோரம் போகாது, றிசாத் பதியுதீனை நெருக்குதலுக்கு உள்ளாக்கி ஆகக் குறைந்தது குறித்த கோரிக்கை வெற்றி பெறும் காலத்தை முற்படுத்துவதற்காகவாவது முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Read More»

thumbnail

30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு.

அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இது குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிட்டும் எனவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Read More»

thumbnail

இருவருக்கும் சிக்கல் ?

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாலித்த தேவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய, உயரிய ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்றையதினம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் கூச்சலிட்டமையால், பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. 

இதேவேளை, இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜித் சமரசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த சூழலில் தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் அதனை நாளை வரை (இன்று வரை) ஒத்திவைப்பதாகவும், இந்த சம்பவத்தை தான் கண்டிப்பதாகவும் சபாநாயகர் நேற்று தெரிவித்திருந்த நிலையில், 

இதனுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரியவால் குழுவொன்று அமைக்கப்பட்டது. 

குறித்த குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கண்காணிப்புக்களும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன மற்றும் பியல் நிஷாந்த ஆகியோர் பாராளுமன்ற தலைமைக்கு செவிமடுக்காது, அபத்தமாக தலைமை மீது குற்றம்சாட்டுவதாக அதில் காணப்படும் கண்காணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், குறித்த அறிக்கையில் முதலாவது பரிந்துரையாக இரு தரப்பிலும் இருந்து, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த கட்சியோ, சுயாதீனக் குழுகளோ அல்லது அதன் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். 

பாராளுமன்ற தலைமையை தரக்குறைவான முறையில் குற்றம்சாட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

அத்துடன், நேற்று குழப்பநிலை வலுக்கக் காரணமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாலித்த தேவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய, உயரிய ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும். 

இந்த அறிக்கையை ஆரம்ப அறிக்கையாக கொண்டு செயற்படுத்தல் மற்றும் பாராளுமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய அல்லது அபத்தமான முறையில் செயற்பட்ட உறுப்பினர்கள் குறித்து பல வழிகளில் ஆராய்ந்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க போதுமான காலத்தை வழங்க வேண்டும், என பல்வேறு பரிந்துரைகளும் அதில் அடங்கியுள்ளன. 

Read More»

thumbnail

மஹிந்த ராஜபக்சவின் உத்தரவு.. கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிலை பரிதாபம். iவிமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பிலவின் கீழ் செயற்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கமைய இது இடம்பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கூட்டு எதிர்க்கட்சியிற்காக ஊடகங்களுக்கு செவ்வி வழங்குதல், மின்னஞ்சல், அச்சிடல், இணையதள மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தின் செயற்பாடுகள் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகள் அனைத்து பசில் ராஜபக்சவின் கீழ் நடைபெறவுள்ளது.

அத்துடன் ஊடக பிரிவிற்காக நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவின் நபர்கள் சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு நெருங்கிய நான்கு பேர் மாத்திரமே செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடக பிரிவில் நூற்றுக்கு 90 வீதமான அதிகாரம் ராஜபக்சர்களிடமே உள்ளது.

அத்துடன் இதுவரையில் கூட்டு எதிர்க்கட்சிக்காக செயற்படுகின்ற விமல் வீரவனசவின் இணையத்தளத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்ச மற்றும் தனக்கு அவசியமான முழுமையான பிரச்சாரத்தை வழங்குமாறு நாமலினால் விமல் வீரவன்சவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவின் திட்டம் மற்றும் முதலீடுகளுக்கமைய ஊடகபிரிவிற்காக வார இறுதி பத்திரிகை ஒன்று வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் வாரம் “இரிதா என்ற பெயரில் இந்த பத்திரிகை சந்தைக்கு வரவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் அப்போதைய ஊடக பிரிவில் செயற்பட்ட மொஹான் சமரநாயக்க மற்றும் இரும்பு மோசடி தொடர்பில் பிரபலமான சுதர்மன் ரந்தலியகொடவிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகைக்காக ராஜபக்சர்களின் கருப்பு பணம் முதலீடு செய்யப்படுகின்ற நிலையில் அதனை வேறு நபரின் முதலீடு மற்றும் நிறுவனம் என காட்டுவதற்காக ராஜபக்சர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய விமல், கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் தப்பி கொள்வதற்காக கட்டியெழுப்பப்பட்ட கூட்டு எதிர்கட்சியின் அமைப்பாளர் பிரிவு, ஊடக பிரிவு ஆகிய, இரண்டு முக்கிய பிரிவுகள் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
Read More»

thumbnail

உம்றா வேலைத்திட்டம் தொடரும் நோன்புக்கு முன் மீதமுள்ளவர்கள் அனுப்பப்படுவர்...நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீதமுள்ள மேலும் 300 உம்றா யாத்திரிகள்  ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள நோன்புக்கு முன்னர் உம்றாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேருக்கு இலவச உம்றா  வேலைத்திட்டத்தில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட இரண்டாம் குழு நேற்று புதன்கிழமை உம்றா  கடைமகளுக்காக மக்கா நோக்கி புறப்பட்டது. அவர்களை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வழியனுப்பி வைத்தனர். 

பின்னர், இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“இதுவரைக் காலமும் உம்றா  அல்லது ஹஜ் கடமையை செய்யாத உலமாக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உம்றா  ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஹிரா பவுன்டேஷன் முன்வந்துள்ளது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட 500 பேர்களில் முதல் 100 பேர் கொண்ட குழு அண்மையில் தமது கடமைகளை நிறைவு செய்து நாடு திரும்பியிருந்தது. 
இரண்டாவது குழு இன்று  மக்கா நகர் நோக்கி புறப்படுகின்றது. மீதமுள்ளவர்கள் நோன்புக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்நிகழ்வில் அமைச்சர் ஹலீம் கலந்து கொண்டதை வரவேற்கின்றோம்” - என்றார்.

Read More»

thumbnail

(தாஜுதீன் கேஸ்..) முன்னாள் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் DIG யிடம் CID வாக்குமூலம் !

தாஜுதீன் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவரிடத்தில் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர்  அமரசிரி சேனாரத்னவிடம் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More»

thumbnail

முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது நடவடிக்கை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றில் கேள்வி ?

அண்மைக்காலமாக முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் அரசு பாராளுமன்றில் விளக்கமளிக்க வேண்டும் என தமிழ் அரசு கட்சி பா உ செலவம் அடைக்கலனாதான் கோரிக்கை ஒன்றை முனவைத்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

தமிழ் அரசு கட்சி பா உ செல்வம் அடைக்கலனாதன் தொடர்ந்து உரையாற்றுகையில்...

புனர்வாழ்வு அளிக்கப்பட முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளதாக  குறிப்பிட்ட அவர் இதற்கான விளக்கத்தை அரசு பாராளுமன்றத்தில் முன்வைத்து மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
Read More»

thumbnail

வடக்கு- கிழக்கு இணைந்த தமிழ் மாநிலம்; கிழக்கிலும் பிரேரணை நிறைவேற்றக் கோரும் கருத்துக்கு கலாநிதி ஜெமீல் கண்டனம்!

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என கிழக்கு மாகாண சபையிலும் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை அந்த மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வன்மையாக கண்டித்துள்ளார்.   

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது போன்று கிழக்கு மாகாண சபையிலும் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பாரதூரமான விடயமாகும். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களை கணக்கில் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக அவ்விரு மாகானங்களும் இணைக்கப்பட்ட விடயமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச்சாசனம் என்று எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் வர்ணிக்கப்பட்டது.

அக்காலப் பகுதியில் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனித்துவமான கட்சியோ பிரதிநிதிகளோ இருக்கவில்லை. முஸ்லிம்கள் மீதான தமிழ் ஆயுதக்குழுக்களின் இனச்சுத்திகரிப்பு, வடக்கு- கிழக்கு இணைப்பினால் முஸ்லிம்கள், தமிழ் பேரினவாதத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டது போன்ற சம்பவங்களே முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனித்துவ அரசியல் கட்சி உருவாக காரணமாக அமைந்திருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன். சுமார் இரு தசாப்த காலம் இணைந்த வடக்கு- கிழக்கு நிர்வாகத்தில் அநியாயங்களையும் கசப்பான உணர்வுகளையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டிருந்ததை இலகுவில் மறந்து விட முடியாது. 

வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் பெரும்பான்மை மாநில சுயாட்சித் தீர்வு அமைய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தென்னிலங்கையில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. சிலவேளை அது தீர்வு முயற்சிகளுக்கு பாரிய முட்டுக்கட்டையாக அமையலாம் என புத்திஜீவிகளினால் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எவ்வித உடன்பாடுமில்லாமல் அதனை வடக்குடன் இணைக்க வேண்டும் என தமிழர் தரப்பு ஒற்றைக்காலில் நிற்பதானது எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒற்றுமைப்படுவதன் மூலமே இரு சமூகங்களும் விடுதலைக்கான தீர்வைப் பெற முடியும் என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் ஊடகங்களில் வலியுறுத்தி வருகின்ற சூழ்நிலையில் அக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு மாகாண சபை ஒருதலைபட்சமாக தீர்மானம் நிறைவேற்றி, முஸ்லிம்கள் தமிழினத்தின் அடிமைச் சமூகமே என்று நிரூபிக்க முற்பட்டிருப்பதன் மர்மம் என்ன?

தமிழ் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம் என்ன என்பது இன்னும் வெளியிடப்படாதுள்ள சூழ்நிலையில் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை அக்கூட்டமைப்பின் மட்டு மாவட்ட எம்.பி.யோகேஸ்வரன் முற்றுமுழுதாக சரி கண்டிருப்பது மட்டுமல்லாமல் அது போன்று கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது ஏன்? அவ்வாறாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் இத்தீர்மானத்திற்கு மறைமுகமாக அங்கீகாரம் வழங்கியுள்ளனரா?

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணத்தில் அதுவும் முஸ்லிம் முதலமைச்சர் பதவியில் இருக்கின்ற நிலையில் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அளவுக்கு தமிழ் எம்.பி.க்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்துள்ளது? இப்படி கோருவதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

எவ்வாறாயினும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதற்கு உடன்பட்டு, கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்தாலும் கூட அக்கட்சியிலுள்ள எந்தவொரு சமூகப் பற்றுள்ள மாகாண சபை உறுப்பினரும் அதற்கு துணைபோய் சமூகத்திற்கு துரோகமிழைக்க மாட்டார்கள் என நான் திடமாக நம்புகின்றேன். 

இன்று கிழக்கிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் அவர்கள் சார்ந்த சிவில் சமூக அமைப்புகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வடக்கு- கிழக்கு மீளவும் இணைக்கப்படக்  கூடாது என ஒருமித்த நிலைப்பாட்டில் பகிரங்கமாக குரல் எழுப்பி வருகின்றபோது முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் இணைப்புக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் செயற்பட்டு வருவதை எம்மால் காண முடிகிறது. இத்தகைய துரோகத்தனங்களை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது. மு.கா.தலைமையை வளைத்துப்போட்டு கிழக்கு முஸ்லிம்களை அடிமைப்படுத்தலாம் என யோகேஸ்வரன் போன்ற தமிழ் எம்.பி.க்கள் நினைப்பார்களானால் அது பகற்கனவாகே இருக்கும்" என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.  

Read More»

thumbnail

முஸ்லிம் பிரதிநிதிகள் நாளை கூடுகின்றனர்..


புதிய அரசியலமைப்பு  சீர்திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம் சார்பான விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்று கூடவுள்ளனர். 

புதிய  அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக என்னென்ன விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனும் தமது கருத்துகளையும்,  ஆலோசனைகளையும் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் அவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர். 

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க  அமைச்சர் ஏ.எச்.எம். பெளசியின்  தலைமையில்  இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்பக்கூட்டம்  ஏற்கனவே  சில வாரங்களுக்கு    முன்பு   கொழும்பில் இடம்பெற்றது.  

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதி கருதியும் அவர்கள் அனைவரையும் கூட்டத்தில் பங்குகொள்ளச் செய்யும் வகையிலுமே  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக  அமைச்சர் பெளசி தெரிவித்தார். 

முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்களின் முஸ்லிம்  சமூகம் சார்பாக  அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டிய  விடயங்கள், ஆலோசனைகள் ஒன்று திரட்டப்பட்டு அவை புத்தி ஜீவிகள்  அடங்கிய குழுவொன்றிடம் கையளிக்கப்பட்டு வரைபொன்று  தயாரிக்கப்படவுள்ளது.

அவ்வரைபே அரசியலமைப்பு  திருத்தம் தொடர்பான மக்கள்  கருத்தறியும் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். Read More»

thumbnail

(வீடியோ இணைப்பு) மடவளை மதீனா பாடசாலை அதிபருக்கெதிரான போராட்டம் இன்று நண்பகல் நிறைவு செய்யபட்டது.- ஜே.எம்.ஹபீஸ் -

வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை மதீனா தேசிய பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி (4.5.2016) பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் சுழற்சி முறை சத்தியாக்கிரகம் ஒன்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை நிர்வாகத்தால் ஊடகங்களுக்கு கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காலை 8.30 மணி முதல் ஆர்பாட்டம் ஆரம்பமாகியதுடன் கண்டி - வத்துகாமம் பிரதான பாதை இடைகிடைக ஸ்தம்பித்தது. ஆர்பாட்டக் காரர்களுக்கு உரிய பதிலை தகுதி வாய்ந்த அதிகாரிகள் வழங்கும் வரை ஆர்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

பெற்றேர்கள், பழைய மாணவர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் எனப் பெருமளவு பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அதே நேரம் பாடசாலை வழமைபோல் நடை பெற்றது. வத்துகாமம் கல்விக் காரியாலயத்திலிருந்து வலயக் கல்விப் பணிப்பாளர் உற்பட அதிகாரிகள் பலர் பாடசாலைக்கு சமூகமளித்திருந்த போதும் பேச்சுவார்த்தைகளின் போது அவ் அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகமும் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வில்லை.

மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான, செய்னுள் ஆப்தீன் லாபிர், ஹிதாயத் சத்தார். எஸ்.கே. சமரநாயக்கா உற்பட இன்னும் சில அரசியல் வாதிகளும் சமூகமளித்திருந்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் பின் வரும் சுலோகங்களை கோசித்தும் பதாதைகளை ஏந்தியும் இருந்தனர்.

அதில் முக்கிய மாக 'கற்றுக் கொள் கற்றுக் கொள், பேசக் கற்றுக் கொள்..' 'அவமதிக்காதே அவமதிக்காதே, பெற்றோரை அவமதிக்காதே..', 'போராட்டம் போராட்டம், ஹிதாயா போகும்வரை போராட்டம்...', 'வெளியேறு வெளியேறு ஹிதாயா வெளியேறு...', 'ஓடு ஓடு, ஹிதாயா வெளியே ஓடு..', 'போடாதே போடாதே டபள்கேம் போடாதே...', 'கல்விக்குப் பஞ்சம், பாடசாலையில் கைலஞ்சம்...,' என்றெல்லாம் கோசம் எழுப்பினர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு  சமூகம் அளித்திருந்த அரசியல்வாதிகள், மற்றும் வருகை தந்த அதிகாரிகளின் பேச்சு வார்த்தை முடிவில், இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும் என உறுதி அளிக்கபட்டதை தொடர்ந்து போராட்டம் இன்று நண்பகல் நிறைவு செய்யபட்டது.

முடிவுகள் தொடர்பான விபரங்களை கீழுள்ள வீடியோ லிங்க் இல் பார்க்கலாம்.Read More»

thumbnail

ஷிஆ விழிப்புணர்வு மாநாடு..


Read More»

thumbnail

2018ம் ஆண்டுக்கான உயர்தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ..

யூ. கே. காலித்தீன்.

கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018ம் ஆண்டுக்கான உயர்தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கல்லூரின் அதிபர் பி.எம்.எம்.பதுர்டீன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது இக்கல்லூரியின் பழய மாணவரும், தெ.கி.ப.கழகத்தின விரிவுரையாளருமான இஸட்.ஷிமரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் சிரேஸ்ட ஆலோசகரும் பொறியியலாளருமான கலாநிதி
யு. பாறுக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட், முன்னால் அதிபர் மர்ஜுனா காதர், இ.மி.ச.கல்முனை பிராந்திய பொறியியலார் எம்.ஆர். பர்ஹான், தெ.கி.ப.விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.சஜா, தெ.கி.ப.சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அவுவக்கர், கல்லூரியின் ப.மா.சங்கத்தின் உப தலைவர் றிஷாட் செரிப், ப.மா.சங்கத்தின்  செயலாளர் பொறியியலாளர் நிஷாத் கமால், கல்லூரியின் அபிவிருத்தி சபையின் செயலாளர் எம்.ஏ.றபீக், கல்லூயின் ஆசிரியர்கள், பழைய மாணவர் சபையினதும், அபிவிருத்தி சபையினதும் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More»

thumbnail

முன்னாள் பொலிஸ் உயரதிகாரி ஒருவரிடம் தற்போது CID விசாரனை...

தாஜுதீன் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவரிடத்தில் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தகவலின் படி முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரிடத்திலே குற்றப்புலனாய்வு பிரிவு விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
Read More»

thumbnail

மன்னாரில் தமிழ் – சிங்கள கிராம மக்களுக்கும் அமைச்சர் ரிஷாதின் முயற்சியில் வீட்டுத்திட்டம்


சுஐப் எம் காசிம்
மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்இ சிங்களக் கிராமங்களுக்கும் அமைச்சர் ரிஷாட் வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறார். அமைச்சர் ரிஷாட்டின் சொந்த முயற்சியினால் அரசினதோ மீள்குடியேற்ற அமைச்சினதோ எந்த உதவியுமின்றி வெளிநாடுஇ உள்நாட்டு பரோபகாரிகளினதும் செல்வந்தர்களினதும் நிதியுதவியுடன் இந்த வீட்டுத் திட்டங்களை அமைத்து வருவதோடு நீர் மின்சாரம் பாதை உட்கட்டமைப்பு பணிகளுக்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் போரின் உக்கிர விளைவினால் பாதுகாப்பு என்ற போர்வையில் முற்றுமுழுதாக விழுங்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் வாழும் முள்ளிக்குள கிராம மக்கள் அதிலிருந்து வெளியேறி சுமார் இரண்டு மைல் தூரத்தே உள்ள இன்னுமொரு பிரதேசத்தில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு இற்றை வரை வீட்டு வசதிகளோ பாதை வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை.

அத்துடன் புதர்கள் நிறைந்த இந்தப் பிரதேசத்தில் மின்சார வசதிகளும் இல்லை. குடிப்பதற்கோஇ குளிப்பதற்கோ நீர்த்தட்டுப்பாடு. இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்த இந்த கிராம மக்களை பார்வையிட அமைச்சர் ரிஷாட் முதன்முறையாக அந்த பகுதிக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்தார்.

மன்னார் மாவட்ட பாதிரிமார்களினதும் முள்ளிக்குள பாதிரியினதும் அழைப்பின் பேரிலே அங்கு சென்ற அமைச்சர் ரிஷாட் மக்கள் படும் கஷ்டங்களை நேரில் கண்டறிந்தார்.

தேர்தல் காலத்தில் மட்டும் வாக்குகளைப் பெறுவதற்காக தங்களை நாடி அரசியல்வாதிகள் வருவதாக கவலை தெரிவித்த அவர்கள்இ அமைச்சர் ரிஷாட்டிடம் தமக்கு விமோசனம் பெற்றுத்தருமாறு வேண்டினர்.
இதன் அடிப்படையிலேயே தற்போது அந்தக் கிராமத்தில் பதினாறு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை எடுத்தார். வீட்டு நிர்மாணப்பணிகள் தற்போது முடிவடையும் தறுவாயில் உள்ளன.

அத்துடன் நீர்ப்பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்த அமைச்சர் நிரந்தரத் தீர்வு ஒன்று தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்இ மற்றும் மின்சாரம்இ பாதைப் போக்குவரத்து பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும் அமைச்சர் ரிஷாட் ஆவன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதே வேளைஇ அமைச்சர் ரிஷாட் கொண்டச்சி – சிலாவத்துறை பிரதேசங்களுக்கு அணித்தான 'சிங்கள கம்மான' என்ற சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்திற்கு சென்ற போது கட்டாந்தரையில் மக்கள் படும் அவதிகளை கண்டறிந்தார்.

தகிக்கும் கொடூர வெயிலில் சிறிய கொட்டில்களில் வாழும் அவர்கள் நீரின்றி படும் அவலங்களையும் மின்சாரமின்றி படும் கஷ்டங்களையும் அமைச்சரிடம் எடுத்துரைத்த போது இந்த மக்களுக்கு விடிவைப்பெற்றுத்தருவதாக அவர் அப்போது உறுதியளித்தார். இந்தப் பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கு  பதினாறு வீடுகளை அமைச்சர் ரிஷாட் நிர்மாணித்து வருகிறார்.
அத்துடன் மின்சார இணைப்புக்களும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் மீண்டும் இந்த சிங்கள – தமிழ் கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட்டை மக்கள் நன்றிப் பெருக்குடன் நோக்கினர். அமைச்சர் செய்த உதவிகளுக்கு தமது நன்றிகளை வெளிப்படுத்தினர்.
 
Read More»

thumbnail

கெளரவ முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களினால் ஓடடமாவடி தாருல் உலும் வித்தியாலயத்திற்கு 78 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

இந்த வருட நிதி ஒதுக்கிட்டின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நிலை பாடசாலைக்கு கெளரவ முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தனது மாகாண நிதியிலிருந்து 3 மாடி வகுப்பறை கட்டிடத்திக்காக சுமார் 78 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் வகுப்பு இல்லாத குறையை நீக்கி உள்ளார். 

இதற்காக பாடசாலை சமூகம் தங்களது நன்றிகளை முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றது. குறிப்பாக பாடசாலை அதிபர் ஜாபீர் கரீம் அவர்கள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.

அத்தோடு செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு 2 மாடி கட்டிடத்திற்கு கெளரவ முதலமைச்சர் 30 லட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்து உள்ளார். முதலமைச்சர் அவர்களின் சேவைகள் எவ்வித பாராபட்சமின்றி சிறப்பான முறையில் கல்குடா பிரதேசத்தில் இடம் பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் மிக்க மகிழ்ச்சியும் வரவேற்கத் தக்கதாக காணப்படுகிறது.
Read More»

thumbnail

மாபெரும் சீதன ஒழிப்பு மாநாடு ! அனைவருக்கும் அழைப்பு. i(S.சஜீத்)
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (06.05.2016) வெள்ளிக்கிழமை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில்  தேசிய தவ்ஹீத் ஜமாஅத் NTJயின் ஏற்பாட்டில் மாபெரும் சீதன ஒழிப்பு மாநாடு இடம்பெறவுள்ளது.

எனவே அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றன.

ஏற்பாடு:
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
மீன்பிடி இலாகா வீதி காத்தான்குடி
Read More»

thumbnail

மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி ..


முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோட்டாவுக்கு நெருக்கமானவர் என கருதப்படும் மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கட்டடம் ஒன்றின் நிர்மாண பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனழ்

தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய சரத் பொன்சேகாவின் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரை கைதுசெய்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

சுமித் மாணவடு மலேஷியாவின் உதவி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றினார். 
Read More»

thumbnail

பொலிசாரால் அதிரடியாக முறியடிக்கபட்ட 15 வயது பாடசாலை மாணவி கடத்தல்.மு.இராமச்சந்திரன்- Tm

 15 வயது பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திச்சென்ற நபரை, ஹட்டன் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன் மாணவியையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று(3) இரவு இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவை மோரா தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, வீட்டுக்கு வெளியேயுள்ள மலசலகூடத்துக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

அவர் நீண்ட நேரமாகயும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் அவரை தேடுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது, சிறுமி கொண்டுச்சென்ற டோச் நிலத்தல் கிடந்துள்ளது. இதனைக் கண்ட உறவினர்கள் அது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் உடனடியாக முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஹட்டன், மஸ்கெலிய பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கியதுடன் தேடுதல் நடவடிக்கையிலூம் ஈடுபட்டனர். இந்நிலையில் டிக்கோயா நகரில் கடமையிலிருந்த ஹட்டன் பொலிஸார், வீதியில் சந்தேகத்துகிடமாக பயணித்த முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது, அதில் குறித்த சிறுமி இருந்ததாகவும் அவரை பாதுகாப்பாக மீட்டதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியையும் கைதுசெய்து பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தனர்.                                                                                                                                              
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More»

thumbnail

உலக அளவில் HSBC வங்கிக்கு பலத்த சறுக்கல்.உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சியின் இலாபம் இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது இலாபம் 14 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிதியாண்டின் இக்காலாண்டின் இலாபம் 6.1 பில்லியன் டாலர்களாக குறைந்திருந்தாலும், இது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவே என அந்த வங்கி கூறுகிறது.

சவால் நிறைந்த சந்தையில் நிலைத்து நிற்கும் செயல்திறம் தமக்கு உள்ளது என அந்த வங்கி கூறுகிறது.

உலக நிதி சந்தைகளில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பால் உலகின் முன்னணி வங்கிகளின் முதலீட்டுப் பிரிவுகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெரியளவில் அடிவாங்கியிருந்தன.
தொகுப்பு: Yakoob mohamed fairoos
Read More»

thumbnail

வரும் எட்டாம் திகதி முதல் கண்டியில் "ரயில் பஸ் " சேவை ஆரம்பம்...

கண்டி நகரில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலுக்கான ஒரு தீர்வு முயற்சியாக கண்டி நகரிலிருந்து பேராதனை வரை ரயில் பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரும் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த சேவை கண்டி நகர் தொடக்கம் பேராதனை நகர் வரை முதல் கட்டமாக மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் விரைவில் இது கடுகன்னாவை வரை செயற்படுத்தப்படவுள்ளது.

பிரதான நிறுத்துமிடங்கள் தவிர்ந்த இணங்கானப்பட்ட சில நிறுத்துமிடங்களிலும் பயணிகள் நலன் கருதி இந்த ரெயில் பஸ் நிறுத்தப்படும் என இலங்கை ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read More»

thumbnail

மைத்ரியும் ரணிலும் திருடர்களை பிடிக்காமல் இருப்பது ஏன்?

நாட்டில் அரசியல் சூது இருக்கும் வரை திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டது என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார்.

இத்தாலி ரோம் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

"முடியுமானால் கைது செய்து காட்டுங்கள்"   
என ஊழல்வாதிகள் சவால் விடுகிறார்கள்.  ஏன் ஊழல்வாதிகளை கைது அரசால் செய்யமுடியவில்லை? 

இதன் பின்னணியில் ஒரு அரசியல் விளையாட்டு உள்ளது.

சுதந்திர கட்சியில் தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொள்வதே மைத்ரிபால சிரிசேனவின் தேவையாக உள்ளது.அவர் சுதந்திர கட்சி பலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதால் உள்ளே இருக்கும் திருடர்களை அவரால் தண்டிக்க முடியாதுள்ளது.

இந்நாட்டு அரசியல் அமைப்பின் படி இன்னும் நான்கு வருடங்களுக்கு பொதுத்தேர்தல் நடத்த முடியாது.மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் எழுந்துவர முடியாது என்பது ரனில் விக்ரமசிங்கவுக்கு நன்றாக தெரியும்.

ரனில் விக்ரமசிங்கவின் சிந்தனை இன்னும் நான்கரை வருடங்களில் மைத்ரியை எவ்வாறு வீழ்த்துவது என்பதாகும்.

சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி தன்னை நிலைப்படுத்திகொள்வது எவ்வாறு என்பதே அவரின் தற்போதய வியூகம்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல தற்போது "ரனில் விக்ரமசிங்கவின் நன்பன் மஹிந்த ராஜபக்ஷ"அதனால் மஹிந்தவின் பைல்களை ரனில் கிடப்பில் போட்டுள்ளார்.

இதனால் தான் "எங்கே  எனது பைல்கள்?இருந்தால் பிடியுங்கள்" என மஹிந்த ராஜபக்ஷ  சண்டியரை போல கூறுகிறார்.

இது ஒரு அரசியல் சூதாக உருவெடுத்துள்ளது இந்த சூது தோற்கடிக்கப்படும் வரை திருடர்களுக்கு தண்டனை வழங்கப்படமாட்டாது.  

என அவர் குறிப்பிட்டார். இந்த உரையின் வீடியோ பார்க்க..
https://www.facebook.com/madawalanewsweb/videos/1024374784315520/
Read More»

thumbnail

(படங்கள் இணைப்பு) மடவளை மதீனா அதிபரை இடம்மாற்றக் கோரி சாத்வீக போராட்டம் ஆரம்பமானது.iமடவளை மதீனா தேசிய பாடசாலை அதிபரை இடம்மாற்றக் கோரி இன்று முதல் முதல் மதீனா தேசிய பாடசாலைக்கு முன்னால் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பாடசாலை சுரகீம கமிட்டியால் ஏற்பாடு செய்யபட்டுள்ள இந்த போராட்டம் இன்று காலை 8:30 முதல் இடம்பெற்று வருகிறது.

குறிப்பிட்ட சாத்வீக போராட்டத்தில் தற்போது சுமார் 300 ஊர்மக்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பாடசாலை நலனுக்காக அதிபர் செல்வி ஹிதாயா பாடசாலையை விட்டு வெளியேற வேண்டும் என்ற தொனிப்பொருளில் பாதாகைகளை ஏந்தி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

பாடசாலை அதிபர் வெளியேறும் வரை குறிப்பிட்ட ஆர்பாட்டம் நடைபெறும்  என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.Read More»

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top